» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஐபிஎல் போட்டிக்குச் சென்ற மாணவர் தற்கொலை : தந்தை திட்டியதால் சோக முடிவு!!

வியாழன் 16, மே 2019 11:37:58 AM (IST)

தூத்துக்குடி அருகே, ஐபிஎல் போட்டிக்குச் சென்றதை தந்தை கண்டித்தால் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம், மேல்மாந்தை கிராமம், மேற்குத் தெருவைச் சேர்நதவர் பழனி மகன் சதீஷ்குமார் (20). அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர், சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை பார்ப்பதற்காக வீட்டில் இருந்து ரூ.10ஆயிரம் பணத்தை எடுத்துச் சென்றாராம். பின்னர் ஊர் திரும்பிய சதிஷ்குமாரை, அவரது தந்தை திட்டினாராம். இதில் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூரங்குடி போலீசார் வழ்ககுப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Black Forest Cakes

Nalam Pasumaiyagam


Anbu Communications



Thoothukudi Business Directory