» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தம்பியை குத்துவிளக்கால் குத்திய அண்ணன் கைது

வியாழன் 16, மே 2019 11:24:20 AM (IST)

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் தம்பியை குத்துவிளக்கால் குத்திய அண்ணனை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி பெரியகடை தெருவைச் சேர்ந்தவர் போஸ்கோ மகன் அண்டோ (51). இவரது தம்பி நிஷாந்த் (35). இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், இருவரது குடும்பத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் நிஷாந்த் தனது அண்ணனை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறினாராம். 

இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த அண்டோ வீட்டிலிருந்து குத்துவிளக்கை எடுத்து தம்பியை குத்தினாராம். இதில் காயம் அடைந்த நிஷாந்த் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மத்தியபாகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்குப் பதிவு செய்து அண்டோவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Anbu Communications

CSC Computer Education



Black Forest Cakes




Thoothukudi Business Directory