» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே வாகனம் மோதி சமையல் மாஸ்டர் பலி

வியாழன் 16, மே 2019 11:06:30 AM (IST)

தூத்துக்குடி அருகே வாகனம் மோதி சமையல் மாஸ்டர் ஒருவர் பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்க்குளம் பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பெருமாள் (50) சமையல் மாஸ்டர். இவர் நேற்று இரவு தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற அசனப் பண்டிகைக்கு சமையல் மாஸ்டராக பணிக்குச் சென்றாராம். 

இரவு 10 மணியவில் வேலைமுடிந்து ஊர் திரும்புவதற்காக, அங்குள்ள சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Anbu Communications

CSC Computer Education


Nalam Pasumaiyagam

Black Forest Cakes



Thoothukudi Business Directory