» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அதிமுக பிரமுகர் திமுகவில் இணைந்தார்

புதன் 15, மே 2019 3:40:56 PM (IST)



தூத்துக்குடி அதிமுக பிரமுகர் கேபி ராஜா ஸ்டாலின் தனது குடும்பத்தினரோடு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த தொழிலதிபரும், அதிமுக பிரமுகருமான கேபி ராஜா ஸ்டாலின் தனது குடும்பத்தினரோடு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இவர், அதிமுகவில் 1972ஆம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினராக இருந்து வந்துள்ளார். ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளராக 16 ஆண்டுகள், ஒன்றிய கழக இணைச் செயலாளராக 4 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.  இவர் 1986 ஆம் ஆண்டு தூத்துக்குடி யூனியன் சேர்மன் பதவிக்கு அதிமுக வேட்பாளராக அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அறிவிக்கப்பட்டவர். 

மேலும் அகில இந்திய தொழிற் சங்கத்தில் 35 ஆண்டுகளாக தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெற்று நிர்வாகக் குழு உறுப்பினராக செயல்பட்டு வந்துள்ளார். தற்போது தனது குடும்பத்தினரோடு திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தொண்டர்கள் விரும்பாத கூட்டணியை அதிமுக கூட்டணி அமைத்திருப்பதாகவும், ஏழைகள் நலனில் அக்கறை கொண்ட கலைஞர் வழித் தோன்றல் முக ஸ்டாலினோடு இனைந்து செயல்பட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திமுக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் கீதாஜீவன் எம்எல்ஏ, அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து

தம்பிமே 17, 2019 - 07:18:09 PM | Posted IP 162.1*****

போஸ் வேற

இவன்மே 16, 2019 - 07:43:33 AM | Posted IP 162.1*****

அதிமுகவும் திமுகவும் ஒண்ணுதான் எல்லாம் மாறி மாறி தாவி தாவி நக்கி பிழைக்கும் கூட்டம் ..

இவன்மே 16, 2019 - 07:40:35 AM | Posted IP 162.1*****

பணம் பணத்தை சேரும் , திருட்டு திராவிட கூடாரத்தையும் கூட

ஜோசப்மே 15, 2019 - 08:22:15 PM | Posted IP 108.1*****

அண்ணன் ராஜா ஸ்டாலின் இனி முக.ஸ்டாலின் பக்கம். வாழ்த்துக்கள்.

கண்மே 15, 2019 - 06:15:29 PM | Posted IP 162.1*****

lol .... rofl

தூத்துகுடிகாரன்மே 15, 2019 - 05:34:59 PM | Posted IP 162.1*****

யாருப்பா இது நானும் தூத்துகுடிகாரன்தான், இந்த பிரமுகரை பற்றிகேள்விகூட பட்டதுஇல்லையே....

GEETHAமே 15, 2019 - 04:57:24 PM | Posted IP 108.1*****

இவன் ஒரு மொக்க பீசு போனதடி ஒட்டு கூட விழாது இவனுக்கு இவனுக்கு ஒரு நியூஸ் ஆ

geetahaமே 15, 2019 - 04:56:33 PM | Posted IP 108.1*****

தி மு க வரலாற்றில் இது ஒரு மைல் கல் ! இனி த் மு க வொக்கு வெற்றி தான் ஒரு தேசி ய தலைவர் இணைந்து விட்டார்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes




Anbu Communications

Nalam Pasumaiyagam

New Shape Tailors


CSC Computer Education

Joseph Marketing



Thoothukudi Business Directory