» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய வேண்டும்: தூத்துக்குடி காவல் நிலையத்தில் புகார்

புதன் 15, மே 2019 12:04:13 PM (IST)

"கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை  கைது செய்ய வேண்டும்" என தூத்துக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்தபோது, "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே. இங்கு முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை" என்றார். கமல்ஹாசனின் இந்த கருத்துக்குடி இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசும்போது, "கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும்" என்று கடுமையாக  விமர்சித்திருந்தார். இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே ஒட்டப்பிடாரத்தில் கமல்ஹாசனின் பிரசாரம் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது.  இந்நிலையில், கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை  கைது செய்ய வேண்டும் என மக்கள் நீதிமய்யம் சார்பில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டப்பிடாரம் தொகுதியின் மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் காந்தி இந்து புகார் மனுவை அளித்துள்ளார்.  இன்ஸ்பெக்டர் ஜீவகுமார் விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

கேனைமே 15, 2019 - 05:53:58 PM | Posted IP 108.1*****

கமல் சார் மன்னசி விடுறாங்க சார் அந்த ஆளுக்கு நாதுராம் கோட்சே நா யாருன்னு தெரியாது, முழிக்கிற முழி யா பார்த்தா தெரியலையா. அது ஹிந்தி அதுனால தெரியலனு சொல்லுவாரு..

தமிழன்மே 15, 2019 - 05:36:02 PM | Posted IP 162.1*****

ஹிந்துக்களின் மனது புண்படும்படிப்பேசிய கமலஹாசனை கைதுசெய்யவேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications

CSC Computer Education

Nalam Pasumaiyagam






Thoothukudi Business Directory