» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வைகாசி விசாக திருவிழா: மே 18 உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு!!

வியாழன் 2, மே 2019 3:22:28 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வருகிற 18ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழா மே மாதம் 18-ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு வருகிற 18.05.2019 சனிக்கிழமை என்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் அன்றைய நாளில் பணிநாளாக இயங்கும் கல்வி நிறுவனங்கள், சுகாதாரத்துறை, மின்வாரியம் மற்றும் இதுபோன்ற இதர அரசு அலுவலகங்களுக்கு உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. 

எனினும் 18.05.2019 அன்று பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளுக்கும் சம்பந்தப்பட்ட மாணவ/மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும் இவ்விடுப்பு பொருந்தாது எனத் தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிவுச் சட்டத்தின்படி (Negotiable Instrument Act-1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக 08.06.2019 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


CSC Computer Education

Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Joseph Marketing

Anbu Communications





Thoothukudi Business Directory