» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மே 23ல் நாட்டு மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்: மு.க. ஸ்டாலின் மேதின உரை!!

புதன் 1, மே 2019 10:26:09 AM (IST)மே 23ஆம் தேதி நாட்டு மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் விடிவு காலம் பிறக்கும் என தூத்துக்குடியில் நடைபெற்ற மே தினப் பேரணியில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வருகை தந்துள்ளார். இந்நிலையில், அவர் இன்று தூத்துக்குடியில் திமுக சார்பில் நடைபெற்ற மே தின பேரணியில் பங்கேற்றார். தூத்துக்குடி வி.வி.டி. சாலை- டூவிபுரம் 5வது தெரு சந்திப்பில் இருந்து ஸ்டாலின் தலைமையில்  பேரணி புறப்பட்டது. பேரணியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். வி.வி.டி. சிக்னல், பாளையங்கோட்டை சாலை வழியாக சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் பேரணி நிறைவு பெற்றது. அங்கு மேதின சின்னத்திற்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து உரையாற்றினார். 

மேதின பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசும்போது "மே தினம் கொண்டாட எல்லா உரிமையும் கொண்ட இயக்கம் திமுக. பேரறிஞர் அண்ணா மே தினத்தை அரசு விடுமுறையாக அறிவித்தார். கலைஞர் ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறை தினமாக அறிவித்தார். கலைஞரின் வலியுறுத்தலின் காரணமாக அன்றைய பிரதமர் விவிசிங் நாடுமுழுவதும் ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறை தினமாக அறிவித்தார். மோடி நாட்டின் காவலாளி அல்ல. களவானி. திமுக தான் தொழிலாளர்களின் காவலாளியாக செயல்பட்டு வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் இருக்க கூடிய அரசுகள் தொழிலாளர்கள் உரிமையை நசுக்ககூடிய அரசாக உள்ளது. வருகிற 23ஆம் தேதி நாட்டு மக்களின் எல்லா பிரச்சனைகளுக்கு விடிவு பிறக்கும் தினமாக அமையும்" என்று தெரிவித்தார். பேரணியில், திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொருப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் பூங்கோதை, மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன், தொமுச மாநில செயலாளர் சண்முகம், மற்றும் தொமுச, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

குமார்மே 2, 2019 - 10:44:45 AM | Posted IP 172.6*****

ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து தூத்துக்குடியை குறிவைப்பதன் நோக்கம் என்ன? வியாபரப்பெருமக்கள், தொழிற்சாலைகள் விழிப்புடன் இருக்கவேண்டும்.

குமார்மே 2, 2019 - 10:44:45 AM | Posted IP 172.6*****

ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து தூத்துக்குடியை குறிவைப்பதன் நோக்கம் என்ன? வியாபரப்பெருமக்கள், தொழிற்சாலைகள் விழிப்புடன் இருக்கவேண்டும்.

ஸ்.சிவராமன்.மே 1, 2019 - 10:43:02 AM | Posted IP 172.6*****

திமுக தான் களவாணி எனறு தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest CakesAnbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory