» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தி.மு.கவில் இருந்து பில்லா ஜெகன் தற்காலிக நீக்கம் : பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு

வியாழன் 25, ஏப்ரல் 2019 5:49:26 PM (IST)

தூத்துக்குடியில், சொத்து தகராறு காரணமாக தம்பியை சுட்டுக்கொன்ற பில்லா ஜெகன் தி.மு.கவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணிச் செயலாளராக பொறுப்பு வகித்தவர் பில்லா ஜெகன். விஜய் ரசிகர் மன்றத் தலைவராகவும் உள்ளார். லாரி தொழில் செய்துவரும் பில்லா ஜெகனுக்கு அவரது தம்பி சிம்சனுக்கும் இடையே சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பில்லா ஜெகன், தனது தம்பியை சுட்டுக் கொன்றார்.  இதையடுத்து தப்பியோடிய பில்லா ஜெகனை திருவனந்தபுரத்தில் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பில்லா ஜெகன் தி.மு.கவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க விதிகளை மீறி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். திமுக அடிப்படை உறுப்பினர் மற்றும் தெற்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் கருத்து

நிஹாApr 26, 2019 - 12:40:43 PM | Posted IP 162.1*****

அப்போ அவர் செய்தது தற்காலிக கொலையா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes
Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory