» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் உட்பட 3பேர் வேட்புமனு தாக்கல்

வியாழன் 25, ஏப்ரல் 2019 4:05:09 PM (IST)ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் உட்பட 3பேர் சுயேட்சை வேட்பாளர்களாக இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். 

தூத்துக்குடி தெய்வச்செயல்புரம் பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் இன்று ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் இளந்தமிழர் முன்னணி கழகம் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவர் ஸ்டெர்லைட் போராட்டங்கள், நிலத்தடி நீர், ஹைட்ரோ கார்பன் போன்ற பல்வேறு மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். 

மானாவாரி நிலங்கள் பயன் பெற தாமிரபரணி நதியிலிருந்து கால்வாய் அமைத்து பாசன நீரமைப்பு பெற்றிட நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரங்களை காக்க நடவடிக்கை எடுக்கப்படும், புதியம்புத்தூர் சுற்றுவட்டாரத்தில் ஜவுளித் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்பது உட்பட பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார். இதுபோல் கீழ வல்லநாடு அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த பண்டாரம் மகன் மாரியப்பன், ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் ஆகியோரும் சுயேட்சை வேட்பாளர்களாக வேட்பு மனு தாக்கல் செய்தனர். 


மக்கள் கருத்து

செ.பரமசிவன் அ ம மு க காசிலிங்கபுரம்Apr 25, 2019 - 09:21:41 PM | Posted IP 172.6*****

வாழ்த்துக்கள் நண்பா உங்கள் பணி சிறக்க மனதார வாழ்த்துக்கள்

M.sundaramApr 25, 2019 - 04:14:08 PM | Posted IP 162.1*****

congratulations. We will work with you for your success.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Nalam Pasumaiyagam

Black Forest Cakes


Anbu Communications

New Shape Tailors

Joseph Marketing


Thoothukudi Business Directory