» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் : மீன்வளத்துறை எச்சரிக்கை

வியாழன் 25, ஏப்ரல் 2019 1:16:40 PM (IST)வங்கக்கடலில் புயலுடன் கூடிய பலத்த காற்று வீசும் என்பதால் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் பாலசரஸ்வதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் பாலசரஸ்வதி வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது,வங்கக்கடலில் தென் தமிழக பகுதியில் புயலுடன் கூடிய காற்று இலங்கை மற்றும் தமிழக கடற்கரையோரம் வீசக்கூடும். இதனால் ஆழ்கடலில் மீன்பிடித்து காெண்டிருக்கும் மீனவர்கள் இன்றே கரை திரும்ப கேட்டு காெள்ளப்படுகிறது. 

மேலும் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை தென்மேற்கு வங்ககடல், இந்தியபெருங்கடல் மற்றும் தமிழக கடற்கரையோர பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. மீன்பிடி இறங்குதள மேலாண்மைகுழு உறுப்பினர்கள் அனைத்து கிராம மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கையை தவறாது கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Black Forest CakesNew Shape Tailors

Joseph Marketing

CSC Computer Education

Nalam PasumaiyagamThoothukudi Business Directory