» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வியாழன் 25, ஏப்ரல் 2019 12:13:22 PM (IST)சுழற்சி முறை பொதுப்பணியிட மாறுதலை அமல்படுத்த வலியுறுத்தி தூத்துக்குடியில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சுழற்சி முறை பொதுப் பணியிட மாறுதல் அறிவிப்பை அமல்படுத்த வேண்டும். பணிமூப்பு அடிப்படையில் பணியிட மாறுதலுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவுபடி இளநிலை உதவியார் தேர்வை காலதாமதமின்றி நடத்த வேண்டும். விற்பனை அடிப்படையில் ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியூ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

தூத்துக்குடியில் சிதம்பர நகர் பஸ் ஸடாப் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலளார் திருச்செல்வம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சிஐடியூ மாவட்ட செயலளார் ரசல், மாவட்ட துணைத் தலைவர் ஞானராஜ், நிர்வாகிகள் முருகன், முத்துமுருகன், ஜெகன் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர். 


மக்கள் கருத்து

MakkalApr 25, 2019 - 10:06:58 PM | Posted IP 162.1*****

Chif minister ￰விட அதிகம் சம்பாத்தியம் பண்ணுறது இவங்க தான் குவாட்டர் கு 5 ரூபாய் அடிக்கண்க இவன்க மாத வருமானம் 1 லட்சத்தை தாண்டி போகுது இதுக்கு எல்லா அதிகாரியும் உடைந்த நாடு நாசமா போகுது

தனி ஒருவன்Apr 25, 2019 - 03:53:17 PM | Posted IP 141.1*****

ரொம்பே முக்கியம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory