» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் வாக்களிப்பு

வியாழன் 18, ஏப்ரல் 2019 11:18:42 AM (IST)தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் எம்எல்ஏக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் ஆர்வமுடன் வாக்களித்தனர். 

தூத்துக்குடி மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார்.  திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, போல்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளர் பொன்குமரன் எஸ்பிஜி கோவில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 

அமமுக வேட்பாளர் புவனேஸ்வரன் ஆழ்வார்தோப்பில் உள்ள நர்சரி பள்ளியில் வாக்களித்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிறிஸ்டியான் ராஜேசேகர், திருச்செந்தூர்  அருகே பரமன்குறிச்சியில்   உள்ள    பள்ளியில்    வாக்களித்தார்.  அதிமுக மாவட்ட செயலளார் எஸ்பி சண்முகநாதன் எம்எல்ஏ பண்டாவிளையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான சித செல்லப்பாண்டியன் டூவிபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில வாக்களித்தார். அமமுக மாவட்ட செயலளார் ஹென்றி தாமஸ் வாத்தியார் தெருவில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். தமிழ்நாடு காங்கிஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம் தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தார். காங்கிஸ்  மாநகர் மாவட்ட தலைவர் சிஎஸ் முரளிதரன் சிவ அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார். முன்னாள் எம்எலஏ சுடலையாண்டி மட்டக்கடையில் உள்ள பள்ளியில் வாக்களித்தார். முன்னாள் மேயர்கள் அந்தாணி கிரேஸி செயின்ட் தாமஸ் பள்ளியில், கஸ்தூரி தங்கம் போல்பேட்டை பள்ளி வாக்குச் சாவடியிலும் வாக்களித்தனர்.  தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், திமுக வேட்பாளர் கனிமொழி ஆகியோர் சென்னையில் வாக்களித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Thoothukudi Business Directory