» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு தொடக்கம் : மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

வியாழன் 18, ஏப்ரல் 2019 8:46:21 AM (IST)தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இன்று(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது.

தூத்துக்குடி தொகுதியில் 7 லட்சத்து 373 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 24 ஆயிரத்து 912 பெண் வாக்காளர்கள், 116 திருநங்கைகள் ஆக மொத்தம் 14 லட்சத்து 25 ஆயிரத்து 401 வாக்காளர்கள் உள்ளனர். தூத்துக்குடி தொகுதியில் 1,595 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் மிகவும் பதற்றமான 3 வாக்குச்சாவடிகளும், பதற்றமான 238 வாக்குச்சாவடிகளும் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் உள்பட மொத்தம் 694 வாக்குச்சாவடிகளில் வெப் கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் வாக்குச்சாவடியில் நடைபெறும் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரடியாக பார்வையிட முடியும்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் 5 மாதிரி வாக்குச்சாவடிகள் வீதம் மொத்தம் 30 மாதிரி வாக்குச்சாவடிகளும், தொகுதிக்கு ஒரு பெண் மட்டுமே பணியாற்றும் பெண்களுக்கான வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டு உள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு பணியாளர்கள் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் மாவட்ட போலீசார் 2 ஆயிரத்து 500 பேர், முன்னாள் ராணுவத்தினர் 300 பேர், ஊர்க்காவல் படையினர் 200 பேர், ஓய்வு பெற்ற போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் 30 பேர் மற்றும் மராட்டிய மாநில சிறப்பு போலீஸ் படை, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை உள்பட மொத்தம் சுமார் 4 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இன்று(வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. கடந்த தேர்தல்களில் ஒவ்வொரு மணி நேரமும் பதிவான வாக்கு விவரங்களை வாக்குச்சாவடி அலுவலர் எஸ்.எம்.எஸ். மூலம் தேர்தல் அதிகாரிக்கு தெரிவித்து வந்தார். இந்த தேர்தலில் அதற்கென பிரத்யேகமாக ஒரு செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. அதில் வாக்குப்பதிவு விவரங்களை தெரிவித்தால் உடனடியாக மாவட்ட தேர்தல் அலுவலகத்தை வந்தடையும் என்று கூறப்படுகிறது.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தலை கண்காணிக்க சீமா சர்மாஜெயின், துக்கிசியாம் பெய்க் ஆகிய பொது தேர்தல் பார்வையாளர்களும், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பார்வையாளராக மாதவி லதா மற்றும் போலீஸ் தேர்தல் பார்வையாளராக சீனிவாசலு ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதே போன்று வேட்பாளர்கள் செலவு கணக்குகளை கண்காணிக்க 2 பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரி சந்தீப் நந்தூரி தலைமையில் தேர்தல் அதிகாரிகள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணியில் போலீசார், பணியாளர்கள் உள்பட மொத்தம் சுமார் 16 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes

Thoothukudi Business Directory