» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 4ஆயிரம் போலீசார்: எஸ்பி முரளி ரம்பா தகவல்

செவ்வாய் 16, ஏப்ரல் 2019 3:29:11 PM (IST)தூத்துக்குடியில் தேர்தலை முன்னிட்டு மொத்தம் சுமார் 4000 போலீசார் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர் என எஸ்பி முரளி ரம்பா தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை தேர்தல் பார்வையாளர் ஷீமா ஜெயன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, ஆகியோர் இன்று மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் உள்ள மொபைல் வாகனங்களை ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திக்குளம் தொகுதிக்கு 25 மொபைல் வாகனங்களும், தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளுக்கு தலா 21 மொபைல் வாகனங்களும், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு 20 வாகனங்களும் மற்றும் கோவில்பட்டி தொகுதிக்கு 22 வாகனங்களும் ஆக மொத்தம் 130 மொபைல் வாகனங்களும் இன்று காலை மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் ஆஜராகி அவைகள் ஆய்வு செய்யப்பட்டு, அவைகளுக்காக நியமிக்கப்பட்ட மொபைல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

200 ஊர்க்காவல் படையினர், 300 முன்னாள் இராணுவத்தினர், 60 ஓய்வு பெற்ற காவல்துறையினர் மற்றும் 30 தீயணைப்புத்துறையினர் மைதானத்தில் ஆஜராகி, அவர்களுக்கான பணி ஒதுக்கீடும் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மஹாராஷ்டிரா சிறப்புக்காவல்படை, ரயில்வே சிறப்புக்காவல் படை, தமிழ்நாடு சிறப்புக்காவல் படை, ஆயுதப்படை மற்றும் மாவட்ட காவல்;துறையினர் ஆகியோர் மொத்தம் சுமார் 4000 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா எச்சரித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesFriends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications

Thoothukudi Business Directory