» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழகத்தை என்றுமே பாஜக புறக்கணித்ததில்லை : தூத்துக்குடி பிரசாரத்தில் அமித்ஷா பேச்சு

செவ்வாய் 2, ஏப்ரல் 2019 4:39:29 PM (IST)தமிழகத்தை என்றுமே பாஜக புறக்கணித்ததில்லை என தூத்துக்குடியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா பேசினார். 

தூத்துக்குடியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேசும்போது,  பாரத ரத்தினா எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை பெயரைக் கூறியும், புல்வமா தாக்குதல் வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகத்தை போற்றி வணங்கியும், விமானப்படை வீரர் அபிநந்தனவின் வீரத்தை போற்றியும், தமிழ் மக்களின் கடவுளான முருகனை வணங்கியும் எனது உரையை தொடங்குகிறேன். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஏழை மக்களுக்காக ஆட்சி நடத்தியவர்கள். அவர்களைப் போல் மோடியின் ஆட்சியும் ஏழைகளுக்கான ஆட்சி. 

கடந்த தேர்தலில் தமிழக மக்கள் பாஜகவுக்கு பெருவாரியான ஆதரவைத் தராவிட்டாலும், தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோரை மத்திய அமைச்சர்களாக்கி பெருமைபடுத்தி உள்ளோம். தமிழ்நாட்டை பாஜக என்றுமே புறக்கணித்தது இல்லை. தமிழகத்திற்கு பா.ஜ.க. அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளோம். காசி முதல் கன்னியாகுமரி வரை உள்ள இந்திய மக்கள் மீண்டும் மோடியே பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறார்க்ள. மோடியின் ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அதிக நிதி வழங்கப்பட்டுிள்ளது. மீண்டும் மோடி ஆட்சி வந்தால் மேலும் நிதி அதிகரிக்கப்படும் என்பதை தமிழக முதல்வருக்கு வாக்குறுதியாக அளிக்கிறேன். 

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் காஷ்மீரில் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்வோம் என்று கூறியுள்ளார்கள். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் திமுக கூட்டணி கூறுகிறது. நம் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானை பழிவாங்க வேண்டும் என்றே மக்கள் விரும்புகிறார்கள். பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் பிறந்த தமிழகத்தில் இருந்து பேசுவதில் பெருமிதம் அடைகிறேன்.  காஷ்மீரை பாஜக ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. திமுக காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ராஜா, கனிமொழி ஆகியோர் மீது எண்ணற்ற ஊழல் வழக்குகள் உள்ளன. இந்தியாவும் தமிழகமும் வலிமையாக இருக்க பாஜக கூட்டணிக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.  

அமித்ஷா வந்தாலே வெற்றி - தமிழிசை 

கூட்டத்தில் தமிழிசை பேசுகையில், மோடி அமித்ஷா ஆகியோர் நாட்டிற்கு நல்ல திட்டங்களை தந்துள்ளனர். அமித்ஷா நடந்து வந்தாலே வெற்றி நிச்சயம். ஆனால், இப்போது பறந்து வந்துள்ளார். இதனால் வெற்றி உறுதியாகி உள்ளது. மோடி ஆட்சியில் வருகிற பட்ஜெட் தயாரிப்பில் தூத்தகு்குடி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தாமரை தூத்துக்குடி கடலிலும் மலர்ந்தே தீரும் என்றார்.  அமைச்சர் கடம்பூர் ராஜூ, சித செல்லப்பாண்டியன், கூட்டணி கட்சித் தலைவர்கள் நிர்வாகிகள் டாக்டர் கிருஷ்ணசாமி, நடிகர் கார்த்திக், ஜான் பாண்டியன், என்ஆர் தனபாலன், ராமசந்திரன், முத்துபாண்டி, அழகர்சாமி, எஸ்ஆர் தேவர், கதிர்வேல், விஜயசீலன், சுந்தர், உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

சாமிApr 4, 2019 - 09:16:18 PM | Posted IP 172.6*****

தூத்துக்குடி ஊருக்குள்ளதானே தமிழிசை அவர்கள் ஓட்டு கேட்கிறார்கள் - தேசபக்தர்கள் திடமாக இருக்கிறார்கள் - ஊழல் ஒருநாளும் வெல்லாது

சாமிApr 4, 2019 - 05:42:16 PM | Posted IP 172.6*****

ஓட்டுக்கள் எண்ணி முடியும்போது கருத்து போடும் கூட்டங்கள் காணாமல் போகும் - பெரும்பான்மை மக்கள் புலம்பிக்கொண்டு இருக்காமல் தங்கள் கடமையை செவ்வனே செய்வார்கள்

ஆசீர். விApr 3, 2019 - 02:24:46 PM | Posted IP 141.1*****

தூத்துக்குடியில் நுழையவே வழி இல்லாமல் ஊருக்கு வெளிய ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஒரு பிரசார கூட்டத்தை நடத்திவிட்டு ஓடிவிட்டது இந்த கூட்டம்

எஸ் kayApr 3, 2019 - 10:39:31 AM | Posted IP 108.1*****

மாணவி சோபியாகு இழைக்கப்பட்ட தொந்தரவுகளை மறக்க முடியுமா ,கருத்துருமை சுதந்திரதியாக்க பறிக்கலாமா,? பதிமூன்று பேர் படுகொலையை மறக்கமுடியுமா ?

சாமிApr 3, 2019 - 09:33:48 AM | Posted IP 172.6*****

நீட் தேர்வை ஒப்புக்கொண்டது திமுக

இவன்Apr 3, 2019 - 07:21:49 AM | Posted IP 141.1*****

நிச்சயம் தோல்வி உறுதி

இவன்Apr 2, 2019 - 10:03:59 PM | Posted IP 162.1*****

வெற்றிகரமான தோல்வி பெற வாழ்த்துக்கள்

மொட்டையன்Apr 2, 2019 - 07:58:50 PM | Posted IP 162.1*****

சாமீ கு மட்டும் தான் தேச பக்தி மற்றவர்கள் எல்லாம் ........................

சாமிApr 2, 2019 - 05:32:34 PM | Posted IP 172.6*****

வெல்லட்டும் வெல்லட்டும் தேசபக்தி வெல்லட்டும்

செந்தில்Apr 2, 2019 - 05:12:04 PM | Posted IP 162.1*****

உங்க கூட்டத்தை தமிழ்நாட்டில் பார்த்ததே இல்லையடா

ஆசீர். விApr 2, 2019 - 04:59:37 PM | Posted IP 162.1*****

நிர்மலா சீதாராமன் அமைச்சராக ஆற்றிய பணிகளைத்தான் பார்த்தோமே. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று பொய் சொன்ன பெண்மணிதானே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes


Thoothukudi Business Directory