» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாடு வளம்பெற மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் : முதல்வர் பழனிசாமி பேச்சு

செவ்வாய் 2, ஏப்ரல் 2019 4:26:51 PM (IST)நாடு வளம்பெற மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும் என தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி பேசினார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்திரராஜன், விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சின்னப்பனை ஆதரித்து அ.தி.மு.க. - பாஜக கூட்டணி சார்பில் பிரசார பொதுக்கூட்டம் ஜோதி நகரில் இன்று மாலை நடைபெற்றது. அதிமுக மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி வரவேற்புரை ஆற்றினார். பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது: மக்களுக்கு சேவை செய்ய மிகப்பெரிய கூட்டணியை அமைத்துள்ளோம். வலிமையான தலைமை, வலிமையான ஆட்சியை தரக் கூடியவர் பிரதமர் மோடி. நாடு வளம்பெற மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும். சிலரின் சதியால் சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திக்கும் நிலை. 

நாடு பாதுகாப்பாக இருக்க வே்ணடும். தகுதியான தலைவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். முடிவெடுக்கும் துணிச்சல் மோடி ஒருவருக்குத்தான் உள்ளது. நமது கூட்டணியை திமுக விமர்சிக்கிறது.  ஆனால், நமது கூட்டணியைக் கண்டும் மிரண்டு போய்உள்ளார். தோல்வி பயம் காரணமாக என்னப் பேசவேண்டும் என்று தெரியாமல் ஸ்டாலின் புலம்பி வருகிறார். 40 தொகுதிகளில் பாஜக - அதிமுக கூட்டணி வெற்றி உறுதி. நமக்கு திரளும் கூட்டத்தை கண்டு ஸ்டாலின் மிரண்டு போயிருக்கிறார். சில துரோகிகளின் சதி காணரமாக இடைத் தேர்தல் நடக்கிறது. அவர்களது சதியை தேர்தல் களத்தில் 18க்கு 18 என்று வெற்றி பெற்று முறியடிப்போம். 

தேர்தலுக்கு பின்னரும், அதிமுக - கூட்டணி தொடரும். மோடி தலைமையிலான அரசுக்கு மக்களின் ஆதரவு அமோகமாக உள்ளது. பிரதமர் மோடி விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார். தமிழகத்தில் 3ஆயிரம் குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. தமிழகத்தில் வீணாக செல்லும் தண்ணீரை தேக்க, தடுப்பணை அமைக்க திட்டம் தயார் செய்துள்ளோம். நாடு செழிக்க மீண்டும் தொழில் வளர்ச்சி பெருக பாஜக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். 2019 தொழில் முதலீட்டு மாநாட்டில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 5லட்சம் பேருக்கு மறைவுமுகமாகவும், 5 லட்சம் பேருக்கு நேரடியாகவும் வேலைவாப்ப்பு கிடைக்கும். ஏழை குடும்பங்களுக்கு ரூ.2ஆயிரம் வழங்குவதை தடுக்கும் வகையில் திமுக வழக்கு தொடர்ந்தது. ஆனால், அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. 

தேர்தல் முடிந்தபின் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். தூத்துக்குடி சம்பவத்திற்கு தமிழக அரசைக் குற்றம்சாட்டி கனிமொழியும், ஸ்டாலினும் பேசி வருகிறார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய நிலம் கொடுத்தது தி.மு.க., அப்போது தொழில்துறை அமைச்சராக இருந்தவர் ஸ்டாலின். ஸ்டெர்லைட் விவகாரத்தில் அ.தி.மு.க. மீது பழிபோடுவது எந்த விதத்தில் நியாயம்? ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுக போடுவது நாடகம்; மக்களை ஏமாற்றுகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுத்தது அ.தி.மு.க. அரசு தான். மேலும், தலித் மக்களின் கோரிக்கைகளை அம்மாவின் வழியில் செயல்படும் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்படும் இவ்வாறு அவர் பேசினார். 


மக்கள் கருத்து

சாமிApr 3, 2019 - 04:19:14 PM | Posted IP 172.6*****

மிஸ்டர் இவன் - இந்த முறை உங்கள் எண்ணம் தாமரையாய் மலரட்டும்

இவன்Apr 3, 2019 - 01:17:33 PM | Posted IP 162.1*****

நாட்டிற்கு தீங்கு விளைவுக்கும் காட்சிகள் எல்லாம் திருட்டு திராவிட காட்சிகள் ....இனி நோட்டா தான்

சாமிApr 3, 2019 - 09:32:46 AM | Posted IP 172.6*****

தமிழகத்தின் அனைத்து சங்கடங்களும் திமுக எனும் தீய சக்தியால்

தர்மயுத்தம்Apr 2, 2019 - 11:10:53 PM | Posted IP 162.1*****

ஸ்டாலின் விரிவாக்கத்திற்கு இடம் ஒதுக்கியது இருக்கட்டும். ஸ்டெர்லைட் னக்கு1994 அக்டோபர் 30 ஆம் தேதி அனுமதி வழங்கியது மற்றும் அடிக்கல் நாட்டப்பட்டது உங்கள் ஆட்சியில் (பிள்ளையார் சுழி போட்டது அம்மாவால்).

இவன்Apr 2, 2019 - 10:05:20 PM | Posted IP 141.1*****

தேர்தல் முடிவிற்கு பிறகு ஆப்பு தான்

குமார்Apr 2, 2019 - 08:03:56 PM | Posted IP 108.1*****

தூத்துக்குடியில் தாமரை மலரும்....மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக பதவியேற்ப்பார்கள்.....பாரதம் செழிக்கும்....

செந்தில்Apr 2, 2019 - 05:13:54 PM | Posted IP 108.1*****

அப்படியா உங்க ஆட்சியில் ஏன் சுட்டிர்கள்

ராமநாதபூபதிApr 2, 2019 - 05:02:36 PM | Posted IP 162.1*****

இந்த மேடையில் இருக்கும் அனைவரும் வருந்தும் காலம் வெகுதொலைவில் இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory