» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துப்பாக்கி பறிமுதல் விவகாரம்: ஹரி நாடார் உட்பட 8பேர் கைது: தூத்துக்குடியில் பரபரப்பு

செவ்வாய் 26, மார்ச் 2019 5:26:52 PM (IST)தூத்துக்குடியில் காரில் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஹரி நாடார் உட்பட 8பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

நெல்லையில் கராத்தே செல்வின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாடார் மக்கள் சக்தி தலைவர் ஹரி நாடார் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவரை ஆதரவாளர்கள் 7பேர் வரவேற்று, காரில் அழைத்துச் சென்றனர். தூத்துக்குடி விமான நிலையம் அருகே புதுக்கோட்டை டோல்கேட்டில் இந்த கார் சென்றபோது பறக்கும் படை தாசில்தார் நடராஜன் தலைமையிலான தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் காரை வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது காரில் ரிவால்வர் மற்றும் 34 தோட்டாககள்,  15 காலி தோட்டா இருப்பது தெரியவந்தது.

காரில் ஹரிநாடாருக்கு பாதுகாப்பிற்காக வந்த முன்னாள் ராணுவ வீரரான உ.பி.யைச் சேர்ந்த நரேந்திர சிங் யாதவ் என்பவரிடம் இந்த துப்பாகி இருந்தது தெரியவந்தது.  தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதியில்லை என்ற காரணத்தினால், அதிகாரிகள் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும், காரையும் பறிமுதல் செய்து ஹரி நாடார் உட்பட 8பேரையும் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி முரளி ரம்பா, ரூரல் டிஎஸ்பி முத்தமிழ் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஹரி நாடார் உட்பட 8பேரை போலீசார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்கள் விபரம் வருமாறு: 

சென்னை தேனாம்பேட்டை ஆணையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமு மகன் சதீஷ்குமார், திருநெல்வேலி மேல இலந்தைகுளம் அருணாசலம் மகன் ஹரி நாடார் என்ற ஹரி கோபாலகிருஷ்ணன் (37), சந்திரசேகர் மகன் சதீஷ்குமார், தேனாம்பேட்டை ராஜா மகன் சதீஸ் (29), முருகன் மகன் விக்னேஷ் கார்த்திக், ஆலங்குடி சுரேஷ் மகன் பாபு (24), மேல இலந்தைகுளம் மகாலிங்கம் மகன் சோலைக்குமார், உபியைச் சேர்ந்த நரேந்திர சிங் யாதவ். மேலும் ரிவால்வர், தோட்டாக்கள் மற்றும் 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹரி நாடார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

sankarMar 27, 2019 - 04:13:20 PM | Posted IP 172.6*****

ஓகே - கனிமொழி அவுட்டு

TamsenMar 27, 2019 - 12:14:12 PM | Posted IP 162.1*****

எனக்கு ஒரு விஷயம் புரியல ... நெல்லையில் கராத்தே செல்வின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார் என்று குறிப்பிட்டுள்ளது... காரில் நெல்லைக்கு அழைத்துச் சென்றனர் என்று குறிப்பிட்டுள்ளது.. தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் இந்த கார் சென்றபோது பறக்கும் படை தாசில்தார் நடராஜன் தலைமையிலான தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் காரை வழிமறித்து சோதனையிட்டனர் என்று குறிப்பிட்டுள்ளது. புதுக்கோட்டை கடந்துதான் வாகைக்குளம் ஏர்போர்ட் உள்ளது ...எப்படி புதுக்கோட்டையில் வைத்து கைதுசெய்ய நேர்ந்தது..

ராஜ ராஜன்Mar 26, 2019 - 06:12:51 PM | Posted IP 108.1*****

தூத்துக்குடியில இருந்து திருநெல்வேலி போற வழியில புதுக்கோட்டை எங்க இருக்குது. பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லணும். திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவா தேர்தல் வேலை செய்ய வந்த தலைவர்கள் இவர்கள். விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்களை அதனால்தான் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes


Joseph Marketing

Nalam Pasumaiyagam

Anbu Communications

New Shape Tailors

CSC Computer EducationThoothukudi Business Directory