» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மக்கள் நீதி மய்யம், அமமுக வேட்பாளர்கள் மனுதாக்கல் : தூத்துக்குடியில் இன்று ஒரே நாளில் 25 வேட்புமனுக்கள்!!

செவ்வாய் 26, மார்ச் 2019 4:39:23 PM (IST)தூத்துக்குடியில் வேட்பு மனுதாக்கல் செய்ய நிறைவு நாளான இன்று அமமுக, மக்கள் நீதி மய்யம், மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் டிபிஎஸ் பொன்குமரன் இன்று தேர்தல் அதிகாரி சந்தீப் நந்தூரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக அவர் தூத்துக்குடி தாமோதர நகரில் உள்ள தேர்தல் காரியாலயம் முன்பிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆட்சியர் அலுவலகம் வந்தார். இதில், மக்கள் நீதி மய்யம் தொகுதி பொறுப்பாளர்கள் ஜவஹர், ரமேஷ், கதிரவன், யோகேஷ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர்  ஊர்வலத்தில் சென்றனர். 

இது போல் அமமுக வேட்பாளர் புவனேஸ்வரன் இன்று மனுதாக்கல் செய்தார். முன்னதாக அவர் அமமுக அலுவலகம் முன்பு ஊர்வலமாக புறப்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்தார். இதில், மாவட்ட செயலளார்கள் ஹென்றி தாமஸ், சுந்தர்ராஜ், முன்னாள் எம்எல்ஏ சிவபெருமாள், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், மாநில மீனவர் அணி இணைச் செயலளார் சுகந்தி கோமஸ், மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பாலன், கிழக்குப் பகுதி செயலாளர் எட்வின் பாண்டியன் உட்பட பலர் உடன் சென்றனர். மேலும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்த வேலாயுதம் மகன் சிவா இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். 

மேலும், சுயேட்சை வேட்பாளர்கள் பணிக்கநாடார் குடியிருப்பைச் சேர்ந்த சிவனேஷ்வரன், இயக்குநர் கெளதமன், சென்னையைச் சேர்ந்த குரு, தூத்துக்குடி எஸ்கேஎஸ்ஆர் காலனியைச் சேர்ந்த ஜாஸ்பர், மாதாகோவில் தெருவைச் சேர்ந்த ரமேஷ், போல்டன் புரத்தைச் சேர்ந்த சன்மேன், குரூஸ்புரம் சரவணன், டூவிபுரம் செல்வின், சாயர்புரம் சுனில் ஜான்சன் ஆபிரகாம், வசவப்ப புறத்தைச் சேர்ந்த கணேசன், எட்டையபுரம் சவுந்திரபேட்டி, புளியங்குளம் ஜெயராஜ், ஓட்டப்பிடாரம் ராமகிருஷ்ணன், இடையர்காடு ஜேம்ஸ், கழுகுவிளை அமலன் ராஜூவ் போனிபாஸ், கோவில்பட்டி ரவிசங்கர், ஆராப்பளையம் நடராஜன், ஆறுமுகநேரியைச் சேர்ந்த மரகதராகவராஜா, முட்டத்தைச் சேர்ந்த லூடாஸ், பள்ளிப்பத்து ராஜலிங்கம், சங்கரலிங்கம், ஆழ்வார் தோப்பைச் சேர்ந்த மகேஸ்வரன், உட்பட 25பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட 45பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 


மக்கள் கருத்து

RubanMar 27, 2019 - 08:15:11 AM | Posted IP 172.6*****

Congratulations mr. Ponkumar,. Let us create development in our Tuticorin. We should unite youth in this movement to route out corruption.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Nalam Pasumaiyagam

CSC Computer Education

Black Forest CakesThoothukudi Business Directory