» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கனிமொழி வெற்றி பெற்றால் சேது சமுத்திர திட்டம் மீண்டும் தொடங்கப்படும் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி

செவ்வாய் 26, மார்ச் 2019 4:13:10 PM (IST)கனிமொழி வெற்றி பெற்றால் சேது சமுத்திர திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் கூறினார். 

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: அரசுத் துறைகளை மோடி அரசு தனியாருக்கு தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது. அம்பானியின் ஜியோ நிறுவனத்திற்காக பிஎஸ்என்எல் நசுக்கப்படுகிறது. கனிமொழி வெற்றி பெற்றால் சேது சமுத்திர திட்டம் மீண்டும் தொடங்கப்படும். தூத்துக்குடி துறைமுகத்தை காப்பாற்ற வேண்டும் எனில் கனிமொழி வெற்றிபெற வேண்டும். 

ராகுல் காந்தி பிரதமராக வந்தால் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும். தூத்துக்குடி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. தமிழிசை, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டினை நியாயபடுத்தி பேசுகிறார் . மதவாத, சாதிய அதிமுக - பாஜக கூட்டணியிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார். பேட்டியின்போது, திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன், பொதுக்குழு உறுப்பினர் என்பி ஜெகன், காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து

தங்கம்Mar 30, 2019 - 11:09:03 AM | Posted IP 172.6*****

ஏற்கெனெவே இந்தமாதிரி பீலா நிறைய பார்த்தாச்சு

சாமிMar 29, 2019 - 06:57:53 PM | Posted IP 172.6*****

தமிழகத்துக்கு துரோகம் செய்துவிட்டு பேச்சு வேற

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph MarketingAnbu Communications

CSC Computer Education


Black Forest Cakes

New Shape Tailors

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory