» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மக்கள் என்னை வெற்றிபெறச் செய்வார்கள் : வேட்பு மனுதாக்கலுக்குப் பின் இயக்குநர் கெளதமன் பேட்டி

செவ்வாய் 26, மார்ச் 2019 12:28:46 PM (IST)தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட திரைப்பட இயக்குநர் கௌதமன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். 

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி, அதிமுக கூட்டணி சார்பில் பாஜக தலைவர் தமிழிசை ஆகியோர் போட்டியிடுகின்றனர். நேற்று வரை 17பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். இந்நிலையில், தமிழ்ப் பேரரசு கட்சியின் தலைவரும், திரைப்பட இயக்குனருமான வ. கெளதமன் தூத்துக்குடி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட இன்று மனுதாக்கல் செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான சந்தீப் நந்தூரியிடம் கெளதமன் தனது வேட்பு மனுவை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த மண்ணைக் காப்பதற்காக தேர்தலில் களமிறங்கியுள்ளேன். தூத்துக்குடி மக்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்புகுழு எனக்கு ஆதரவு தருவார்கள். ஸ்டெர்லைட் போராட்டத்தில் பலியான மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். முன்னதாக ஒத்த கருத்துடைய நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். இதில் உடன்பாடு ஏற்படாததால் மக்களை நம்பி தனியாக களமிறங்குகிறேன். கமல்ஹாசனிடம் ஏன் ஆதரவு கேட்கவில்லை என்கிறீர்கள். ரஜினி பாஜகவின் நேர்முகம், கமல் பாஜகவின் மறைமுகம் என்பதால் அவரது ஆதரவை கேட்கவில்லை. தூத்துக்குடி மக்கள் என்ன வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கையுள்ளது" என்றார். வேட்புமனுதாக்கலின் போது கட்சி நிர்வாகிகள் அமீர், தென்னவன், ஜோதிமணி, அனிதா, கிங்ஸ்லி ஆகியோர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து

நல்லவன்Mar 27, 2019 - 08:03:12 AM | Posted IP 162.1*****

அன்னே உங்க தகுதிக்கு நீங்க குறைஞ்சது தமிழ்நாட்டுல உள்ள ௪௦ தொகுதியிலும் நிக்கணும். அசுவல்லி நீங்க இந்தியாவில 400 தொகுதியிலும் நிக்க கூடிய தகுதி உங்களுக்கு இருக்கு. நீங்க நல்லா வரணும். பின் குறிப்பு : உங்களுடைய டிவி பேட்டி ஆஹா ஓஹோ அற்புதம். உங்க அடுத்த டார்கெட் முதலமைச்சர் தான்.எங்களோட ௧௦௦ வோட்டு உங்களுக்காக ரிசர்வ் செய்யப்படுகிறது.

AnbuMar 27, 2019 - 08:00:42 AM | Posted IP 162.1*****

உங்களுக்கெல்லாம் என்ன வேண்டும்?

சாமிMar 26, 2019 - 06:50:34 PM | Posted IP 108.1*****

மோடி அலையில் மற்றவர்கள் காணாமல் போவது உறுதி - அதுவும் இந்துமக்கள் விரோத திமுக டெபாசிட் இழக்கும்

தங்கராஜ்Mar 26, 2019 - 04:40:17 PM | Posted IP 157.5*****

தி மு க சிறந்தது

தூத்துகுடிகாரன்Mar 26, 2019 - 01:10:28 PM | Posted IP 162.1*****

நீ டெபாசிட் கூட வாங்க மாட்ட......

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam Pasumaiyagam


CSC Computer Education


Anbu CommunicationsThoothukudi Business Directory