» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழிசைக்கா? கனிமொழிக்கா? குமரி அனந்தன் ஆதரவு யாருக்கு?

செவ்வாய் 26, மார்ச் 2019 11:56:28 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் வெற்றி யாருக்கு? மகள் தமிழிசைக்கா? கூட்டணி வேட்பாளர் கனிமொழிக்கா? என்ற கேள்விக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் ருசிகர பதில் அளித்துள்ளார். 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந்தேதி நடக்க உள்ளது. அனைத்துக் கட்சிகளுமே வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளது. குறிப்பாக 2 பெண் வேட்பாளர்கள், அதிலும் பிரபலமான பெண் தலைவர்கள் மோதும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகளும், தமிழக பா.ஜ.க. தலைவராக இருக்கக்கூடிய டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், தி.மு.க. மகளிர் அணி செயலாளருமான கனிமொழியும் எதிர், எதிர் முகாமில் இருந்து களம் காண்கின்றனர். தூத்துக்குடி தொகுதி மக்கள் யாருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்க போகிறார்கள் என்பது மே 23-ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியாகும் நேரத்தில் தான் தெரியவரும் என்றாலும், இப்போதே அவர்கள் இருவரையும் ஆதரித்து, இரு கட்சிகளின் சார்பிலும் தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. 

இதற்கிடையே சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு நேற்று வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனிடம், ‘தூத்துக்குடி தொகுதியில் உங்கள் கூட்டணி சார்பில் போட்டியிடும் கனிமொழியை ஆதரித்தும், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் உங்கள் மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை எதிர்த்தும் பிரசாரம் செய்வீர்களா? என்றும், கனிமொழி தூத்துக்குடியில் வெற்றி பெறுவார் என்று நம்புகிறீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இருப்பினும் யார்? யார்? வெற்றி பெறுவார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு’ என்று பிடிகொடுக்காமல் பதில் அளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

Nalam Pasumaiyagam

CSC Computer Education

New Shape Tailors

Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory