» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி

ஞாயிறு 24, மார்ச் 2019 10:12:29 PM (IST)தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சியில் மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, கலந்துகொண்டு அலுவலர்களுக்கு பணிகள் குறித்து தெரிவித்தார். 

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு ட்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி இன்று (24.03.2019) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, கலந்துகொண்டு, அலுவலர்களுக்கு பணிகள் குறித்து தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் பேசியதாவது:- நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ளது. நமது மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 1618 வாக்குச்சாவடிகள் உள்ளது. இதில் வாக்குப்பதிவு தினத்தன்று வாக்குச்சாவடியில் பணியாற்றிட 9000க்கும் மேற்பட்ட அலுவலர்களுக்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு இடத்தில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. 

வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர்கள் 1, 2, 3 அலுவலர்களும், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் விளாத்திகுளத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள் 4, 5 ஆகியோர் கூடுதலாக நியமிக்கப்படவுள்ளனர். வாக்குச்சாவடியில் பணிபுரியும் ஒவ்வொரு அலுவலர்களுக்கும் தேர்தல் ஆணையத்தின் மூலம் அவர்களுக்கு என்னென்ன பணிகள் என்பது குறித்து தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களை முழுமையாக தெரிந்துகொண்டு அதனடிப்படையில் பணியாற்றிட வேண்டும். வாக்குப்பதிவு காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெறும். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக மாதிரி வாக்குப்பதிவினை நடத்த வேண்டும். மாதிரி வாக்குப்பதிவில் அனைத்து வேட்பாளர்களுக்கும் வாக்களிக்கப்பட வேண்டும். குறைந்தது 50 வாக்குகளாவது அளிக்க வேண்டும். 

மாதிரி வாக்குப்பதிவு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும். வாக்குச்சாவடிக்குள் யார் யார் வரலாம் என்பது குறித்து தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை கவனமாக கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடி மற்றும் மிகவும் பதற்றமான வாக்குசாவடிகளில் சிசிடிவி மூலம் தேர்தல் ஆணையத்தின் நேரடி கண்காணிப்பில் இருக்கும், மேலும் அங்கு மைக்ரோ பார்வையாளர்; கண்காணிப்பும் இருக்கும். உங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப்படும்.

வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறையாக சீல் செய்ய வேண்டும். ஒவ்வொரு பணியையும் அதற்கென குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டும். ஒரு சிறிய தவறுகூட பெரிதாக உருவாகி வாக்குப்பதிவு தொடர்ந்து நடத்த இயலாமல் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் நிலைக்கு சென்றுவிடும். எனவே இப்பணியில் மிகுந்த கவனத்துடன் முறையாக செய்திட வேண்டும். அதற்காகவே இதுபோன்ற பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்த தேர்தலில் 384 வேட்பாளர்கள் வரை இணைக்கக்கூடிய வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரம் (ஏஏPயுவு) பயன்படுத்தப்படவுள்ளது. இது முதல்முறையாக பயன்படுத்தப்பட இருப்பதால் இதுகுறித்தும் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரத்தை வாக்குப்பதிவு முடிந்ததற்கான பட்டனை அழுத்தி சீல் செய்வது உள்ளிட்ட முக்கிய பணிகளையும் கவனத்துடன் செய்திட வேண்டும். வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர் வாக்குச்சாவடி ஏஜெண்ட் உள்ளிட்டோர்கள் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் வர அனுமதி உண்டு. காவல் துறையினருக்கு வாக்குச்சாவடிக்குள் வர அனுமதி இல்லை. வாக்குச்சாவடி அலுவலர்கள் அழைத்தால் மட்டுமே காவல் துறையினர் உள்ளே செல்ல வேண்டும். தேர்தல் ஆணைய அனுமதி அட்டை பெற்றுள்ள செய்தியாளர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்ல அனுமதி உண்டு. இருப்பினும் வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிக்கு செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. வாக்குப்பதிவு மிகவும் ரகசியமான முறையில் நடைபெற வேண்டும். வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியில் சன்னல்கள் இல்லாதவாறும் மற்றும் யாரும் பார்க்காத வகையிலும் அமைக்க வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கூட (டீடுழு) வாக்குச்சாவடிக்குள் வர அனுமதி இல்லை. 

கண் பார்வையற்றவர்கள் அவர்களுடன் ஒருவரை அழைத்து வந்து வாக்களிக்கலாம். ஆனால் ஒருவர் ஒரு கண் பார்வையற்றவர்களுடன் உள்ளே வர முடியும். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பயிற்சி பெறும் நீங்கள் இரண்டாம் கட்ட பயிற்சி நீங்கள் பணியாற்றும் வேறு சட்டமன்ற தொகுதியிலும், 3ம் கட்ட பயிற்சியின்போது நீங்கள் பணியாற்ற போகும் வாக்குச்சாவடி குறித்த விவரமும் உங்களுக்கு ரேண்டம் முறையில் தெரிவிக்கப்படும். எனவே, வாக்குச்சாவடி தலைமை அலுவலர் உள்ளிட்ட அனைவரும் தேர்தல் ஆணையத்தின் கையேடுகளை முழுமையாக படித்து தெரிந்துகொண்டு அவைகளை கடைப்பிடித்து கவனத்துடன் தேர்தல் பணியாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து, கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடியினை மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, தூத்துக்குடி வட்டாட்சியர் ஜாண்சன் தேவ சகாயம் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer EducationNalam Pasumaiyagam

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory