» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் : தூத்துக்குடியில் தமிழிசை தாக்கு

ஞாயிறு 24, மார்ச் 2019 3:46:58 PM (IST)
ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக தூத்துக்குடியில் தமிழிசை செளந்திரராஜன் குற்றம்சாட்டினார்.

தூத்துக்குடியிலுள்ள தனியார் ஹோட்டலில் பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அவர் தெரிவித்ததாவது :இத்தொகுதியில் எங்கள் கூட்டணி யாதவ மக்களை புறக்கணிப்பதாக சில யாதவ இளைஞர்கள் சொல்வதாக கேள்விபட்டேன், யாதவ மக்கள் அல்ல அனைத்து மக்களையும் அரவணைத்து செல்லக்கூடிய கூட்டணியே அதிமுக பாஜக கூட்டணி என்பதை தெளிவுபடுத்திக்கொள்கிறேன்.தூத்துக்குடியில் இன்று நேர்மறையான அரசியலை எடுத்துச்செல்ல வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்த அண்ணன் வைகோ பாஜக ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள், வணிகர்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை, இங்குள்ள மக்களுக்கு பயிர் பாதுகாப்பு திட்டம் கிடைக்கவே இல்லை என்று பல பொய்களை அடுக்கியிருக்கிறார். ஆனால், பயிர்பாதுகாப்பு திட்டத்தில் அதிகம் பலன் அடைந்த மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம், அதுமட்டுமல்ல காங்கிரஸ் கட்சிதான் சிறுவணிகத்தில் அன்னிய முதலீட்டை கொண்டு வந்தார்கள். 

சிறு வணிகத்தில் அன்னிய முதலீட்டை தடுத்த கட்சி பாஜக.மேலும் ஜிஎஸ்டி முறையால் சரியான கணக்கை சிறுவணிகர்கள் காட்டுவதன் மூலம் அவர்கள் எளிய முறையில் வங்கிகளில் கடன்களை பெற முடிகிறது. சிலிண்டர் மானியத்தில் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக மக்களின் கைகளுக்கு மானியப்பண பலன் கிடைக்க வழி செய்தது பாஜக அரசு தான்.தூத்துக்குடி மக்கள் தேசியத்தையும், தெய்வீகத்தையும் மதிப்பவர்கள், இது ஆன்மீக பூமி, தேசிய பூமி, சுதந்திர போராட்ட வீரர்களை கொடுத்த பூமி. அதனால் இந்த பூமி தேசியத்தின் பக்கம் என்பது எனது கருத்து.

இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள் என்று வைகோ சொல்ல வேண்டிய சூழல் வந்திருக்கிறது.ஓட்டு வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்று பகுத்தறிவு எங்கோ பறந்து போய்விட்டது .பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு நீங்கள் செய்யும் இந்து மத எதிர்ப்பு இந்த தூத்துக்குடி மண்ணில் செல்லுபடியாகாது. நானும் பூணுால் போட்டியிருக்கிறேன், நானும் பிராமனன் தான் என்று ராகும் சொல்லும் அளவிற்கு இந்த அரசியல் அவர்களை தள்ளியிருக்கிறது.

மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லது கிடைக்கும் என்பதை அதிமுக அரசும் பாஜக அரசும் இணைந்திருப்பது மூலம் தெரிகிறது.மக்களுக்கான நல்ல திட்டங்கள் தொடரவே அதிமுகவும் பாஜக வும் கூட்டணி வைத்துள்ளது.ராஜ்யசபாவிற்கு சரியாக செல்லாத கனிமொழி லோக்சபாவிற்கு சென்று என்ன செய்ய போகிறார்?

என்னை சுட்டிக்காட்டியோ, பாஜக வை சுட்டிக்காட்டியோ ஒரு ஊழல் குற்றச்சாட்டையும் சொல்ல முடியாது என்பதை இந்த பாரத தேச முழுமைக்கும் கூறிக்கொள்கிறேன்.நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்ற ஒற்றைக் கூறிக்கோளுடன் தூத்துக்குடி மக்களை அணுகுகிறேன்.எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் செய்யும் விமர்சனம், மிக மோசமாகவும், நாகரீகமற்றதாகவும் இருந்து வருகிறது.ஸ்டாலின் அவர்களே, ஸ்டெர்லைட் விவகாரத்தில் உங்களது நிலைபாடு என்ன? உங்கள் கட்சியின் முக்கிய பிரமுகர் தூத்துக்குடியில் போட்டியிடும் போது உங்கள் தேர்தல் அறிக்கையில் ஏன் ஸ்டெர்லைட் விவகாரத்தை கூறிப்பிடவில்லை. ஸ்டெர்லைட் விவகாரத்தில் திராவிட கழகம் இரட்டை வேடம் போடுகிறது.

கன்னியாக்குமரியில் பொன். ராதாகிருஷ்ணன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இருக்கிறேன், என்னை ஆதரித்து தூத்துக்குடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , பிரேமலதாவிஜயகாந்த் உள்ளிட்ட பலரும் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.நான் பத்து மருத்துவமணைகளுக்கு சென்ற பணியை விட்டுவிட்டு அரசியல் பொது வாழ்க்கைக்கு வந்ததே பொதுமக்களுக்காகதான்.என்று அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜக பொறுப்பாளர் ,பாஜக மாநில துணைத்தலைவர் பி.டி.அரச குமார், கரு.நாகராஜ், எம்.என்.ராஜன், முரளி யாதவ், தேசிய குழு உறுப்பினர் சந்தனகுமார், தூத்துக்குடி மாவட்ட தலைவர் பாலாஜி, தொகுதி பொறுப்பாளர் விஎஸ்ஆர் பிரபு, வர்த்தகஅணி சிவராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து

சாமிMar 26, 2019 - 06:54:49 PM | Posted IP 108.1*****

கலவரம் திட்டமிட்டு தூண்டப்பட்ட ஒன்று -

தூத்துக்குடி மக்கள்Mar 26, 2019 - 01:25:52 PM | Posted IP 162.1*****

வெற்றி கிடைக்கும் வாழ்த்துக்கள்

இவன்Mar 25, 2019 - 06:07:36 PM | Posted IP 162.1*****

திருடனுக்கு தேள் கொட்டியது போல் .. வாய்க்கொழுப்பு ...

ஆசீர். விMar 25, 2019 - 11:44:32 AM | Posted IP 172.6*****

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு ஆறுதல் சொல்லவராத எடப்பாடி இப்போ எப்படி தமிழிசைக்கு ஒட்டு கேட்டு வருவார்????

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

CSC Computer Education
Nalam PasumaiyagamThoothukudi Business Directory