» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து 2 லட்சம் வாக்காளர்களுக்கு பயிற்சி : தூத்துக்குடி ஆட்சியர் பேட்டி

ஞாயிறு 24, மார்ச் 2019 12:54:24 PM (IST)



யாருக்கு வாக்களித்தோம் என தெரிந்து கொள்ள உதவும் விவி பேட் இயந்திரம் மற்றும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து 2 லட்சம் வாக்காளர்களுக்கு தூத்துக்குடியில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி  தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 18ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 100% பொது மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழக தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது இதேபோல் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில்  பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இன்று தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடலில் உள்ள சங்குகளால் 100 சதவீத வாக்களிப்போம் என  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து 100 சதவீத  வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி சங்குகளால் செய்யப்பட்ட கீ செயின் வழங்கினார். கடற்கரையில் திருநங்கைகள் 100 சதவீத வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி வண்ணக்கோலங்கள் வரைந்தனர். மேலும் பொதுமக்களுக்கு வாக்கு இயந்திரங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 

இதுவரை  தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 64 வழக்குகள்  பதிவு செய்யப்பட்டுள்ளது.  உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில்  பணத்தை எடுத்துச் சென்றதாக 27 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர்  சந்தீப்நந்தூரி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் உதவி பயிற்சி ஆட்சியர் அனு மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Nalam Pasumaiyagam


Black Forest Cakes

CSC Computer Education




Thoothukudi Business Directory