» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாஜக வேட்பாளர் தமிழிசை நாளை வேட்பு மனு தாக்கல் : சண்முகநாதன் எம்எல்ஏ. தகவல்

ஞாயிறு 24, மார்ச் 2019 12:37:34 PM (IST)

தேசிய ஜனநாயக கூட்டணி தூத்துக்குடி நாடாளுமன்றதொகுதி பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசைசௌந்தரராஜன் நாளை (25.03.2019) மதியம் 12 மணிஅளவில் வேட்புமனுதாக்கல் செய்கிறார். என எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது,தேசிய ஜனநாயக கூட்டணியின் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் நாளை மதியம் 12 மணிஅளவில் வேட்புமனுதாக்கல் செய்கிறார். பின்பு தூத்துக்குடி பானுபிருந்தாவன் ஓட்டலில் வேட்பாளர் அறிமுக கூட்டம் மாவட்டசெயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டமும் நடைபெறுகிறது. அதன் பின்பு தூத்துக்குடி தேவர்புரம் ரோடு அமைந்துள்ள தலைமைதேர்தல் காரியாலயம் திறந்து வைக்கப்படுகிறது.

இந்த நிகழ்வுகளில் அமைச்சர், தலைமைக் கழகநிர்வாகிகள் ,நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் சட்டமன்றஉறுப்பினர்கள்,சார்புஅணிகளின் நிர்வாகிகள் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாவட்ட ஒன்றிய நகர பேரூராட்சி பகுதி ஊராட்சி வட்ட கிளை கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். இந்நிகழ்வுகளில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் செயல்வீரர்கள் வீராங்கனைகள் பெருந்திரளாக கலந்து கொண்டுசிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்தஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

IndianMar 24, 2019 - 06:04:30 PM | Posted IP 172.6*****

From where it starts?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

CSC Computer EducationBlack Forest CakesAnbu Communications

Nalam Pasumaiyagam

New Shape TailorsThoothukudi Business Directory