» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 இளம்பெண்கள் மாயம்

ஞாயிறு 24, மார்ச் 2019 12:11:29 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 இளம்பெண்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எட்டயபுரம் அருகேயுள்ள சோழபுரம் மஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த பெருமாள்சாமி மகள் மாரியம்மாள் (17). இவர் கோவில்பட்டியிலுள்ள ஒரு மில்லில் வேலை செய்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் கணேசமூர்த்திக்கும், மாரியம்மாளுக்கும் காதல் இருந்து வந்ததாம். கடந்த வெள்ளியன்று வேலைக்கு சென்ற மாரியம்மாளை திருமணஆசை காட்டி கணேசமூர்த்தி கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது தாயார் சண்முகத்தாய் கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி கோரம்பள்ளம் பெரியநாயகிபுரத்தை சேர்ந்த பூராஜ். இவரது மகள் தனலட்சுமி (22). இவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு கல்லுாரியில் பிஏ படித்து முடித்தார். கடைசி நாள் அன்று மாணவிகளுடன் குரூப் போட்டோ எடுத்து விட்டு வருவதாக சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாயார் விஜயலட்சுமி புதுக்கோட்டை போலீசில் புகார் அளித்தார் . அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி அருகே வேப்பலோடை பாண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்த கோபால் மகள் முத்துபிரியா (17). இவர் குளத்தூர் அரசுப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். கடந்த 22 ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை கோபால் தருவைக்குளம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Black Forest Cakes


Anbu Communications


CSC Computer Education


Joseph Marketing

Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory