» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் அறிமுக கூட்டம்

ஞாயிறு 24, மார்ச் 2019 11:58:19 AM (IST)
தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள தனியார்  திருமண மண்டபத்தில் வைத்து மக்கள் நீதி மையத்தின் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.

இதில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரண்டிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிட இருக்கிறது.அதனை தொடர்ந்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக பிரபல தொழிலதிபர் டிபிஎஸ் பொன் குமரன் போட்டியிடுகிறார்.

மக்கள் நீதி மய்யத்தின் செயல்வீரர் கூட்டம், தூத்துக்குடி தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.கூட்டத்திற்கு , தொகுதி பொறுப்பாளர்கள் ஜவஹர், பாலா ஆகியோர் தலைமை தாங்கினார்கள். தொகுதி பொறுப்பாளர் ரமேஷ் வரவேற்றார். கூட்டத்தில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் டிபிஎஸ் பொன் குமரன், மநீம நிர்வாகிகள் யோகேஷ், கதிரவன், திவ்யபாரதி, சண்முகராஜா, உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள அனைத்து முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph MarketingCSC Computer Education


Black Forest Cakes

New Shape Tailors


Nalam Pasumaiyagam

Anbu CommunicationsThoothukudi Business Directory