» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரூ.2ஆயிம் சிறப்பு நிதியுதவி பெற 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்: ஆட்சியர் தகவல்

சனி 23, பிப்ரவரி 2019 4:35:05 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற 26.02.2019-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு குறிப்பாக விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழை தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஒருமுறை சிறப்பு நிதியுதவி ரூ.2000ஃ-வழங்கும் திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக மக்கள்நிலை ஆய்வின் அடிப்படையிலும் (PIP), வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பட்டியல் (BPL) மற்றும் AAY CARD திட்ட பயனாளிகளிடம் இருந்து கூடுதல் விபரங்கள் பெற்று கொள்ளப்பட்டன. 

இதுதவிர ஏனைய விடுப்பட்ட விவசாய தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழை தொழிலாளர்கள் மற்றும் தகுதியானவர்கள் அனைவரும் விடுபடாமல் பயன் பெறுவதற்கு ஏதுவாக இதற்குரிய புதிய விண்ணப்பத்தினை றறற.வசென.பழஎ.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து அல்லது இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தினை கிராமப்புற பகுதிகளுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் மற்றும் நகர்புறங்களுக்கு பேரூராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள் மற்றும் மண்டல அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். 

மேற்படி விண்ணப்பங்களில் தெரிவித்துள்ளப்படி அனைத்து விவரங்களையும்; பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் ஒப்படைத்து அதற்கான ஒப்புதலை பெற்றுக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பத்தினை 26.02.2019-க்குள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் ஒப்படைத்து அதற்கான ஒப்புதலை பெற்றுக் கொள்ள பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் சந்தீப நந்தூரி, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes


Thoothukudi Business Directory