» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காயல்பட்டணம் நகராட்சி சார்பில் மக்கள் நல பணிகள் : அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்

செவ்வாய் 19, பிப்ரவரி 2019 12:17:23 PM (IST)



காயல்பட்டணம் நகராட்சி சார்பில் மக்கள் நல பணிகள் அடிக்கல் நாட்டு விழாவை மைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார். 

காயல்பட்டணம் நகராட்சி சார்பில் பொதுமக்கள் புகார் மற்றும் ஆலேசனைகளை தெரிவிக்க "ஹலோ காயல் 7598950800 திட்டம்" துவக்க விழா, மற்றும்மக்கள் நல பணிகள் அடிக்கல் நாட்டு விழா இன்று காலை காயல்பட்டினம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் முருகன், வரவேற்புரை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமை வகித்தார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, மக்கள் நல பணிகளை துவக்கி வைத்து விழா பேருரையாற்றினார்.

விழாவில் முன்னாள் அமைச்சர் அதிமுக மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், நெல்லை- தூத்துக்குடி ஆவின் சேர்மன் என்.சின்னத்துரை, நெல்லை- தூத்துக்குடி மீனவ இணைய தலைவர் சேவியர், அதிமுக மாவட்ட பொருளாளர் ஜெபமாலை, மேற்கு பகுதி செயலாளர் முருகன், கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன்,  மாவட்ட பனை வெல்ல கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், காயல்பட்டினம் நகர செயலாளர் செய்யது இப்ராகிம், நகர அம்மா பேரவை செயலாளர் அன்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக நகராட்சி பொறியாளர் சுரேஷ், நன்றியுரையாற்றினார் 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Joseph Marketing

New Shape Tailors


Nalam Pasumaiyagam



Black Forest Cakes

CSC Computer Education




Thoothukudi Business Directory