» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மானாவாரி நிலத்தில் அதிக மகசூல் : தேசிய விருது பெற்ற விவசாயிக்கு பாராட்டு

திங்கள் 21, ஜனவரி 2019 4:57:48 PM (IST)



கோவில்பட்டியில் மானாவாரி நிலத்தில் பருத்தி செடிக்குள் ஊடுபயிராக வெங்காயம் பயிரிட்டு அதிக மகசூல் பெற்றமைக்காக மத்திய அரசின் தேசிய விருது பெற்ற விவசாயிக்கு பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த 38வது மாதக் கூட்டத்தில் கோவில்பட்டி அருகே உள்ள தருமத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி என்பவருக்கு மானாவாரி நிலத்தில் பருத்தி செடிக்குள் ஊடுபயிராக வெங்காயம் பயிரிட்டு அதிக மகசூல் பெற்றமைக்காக மத்திய அரசின் தேசிய விருது பெற்ற விவசாயிக்கு பாராட்டும் யோகா போட்டியில் தேசிய அளவில் தங்க பதக்கம் பெற்ற வேல்ஸ் பள்ளி மாணவர் மிதுன் செல்டனுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது. 

பள்ளி மாணவர்களின் நகைச்சுவை பேச்சாற்றலுக்கு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது கூட்டத்திற்கு மைக்ரோ பாய்ண்ட் ஐ.டி.ஐ முதல்வர் ஆம்ஸ்ட்ராங் தலைமை வகித்தார், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். மகிழ்வோர் மன்ற காப்பாளர் சேர்மதுரை அனைவரையும் வரவேற்றார், மகிழ்வோர் மன்ற காப்பாளர் துரைராஜ் அறிக்கை வாசித்தார். பெருந்துறை கொங்கு பள்ளி ஆசிரியர் ரவிக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு பாராட்டு விருது வழங்கி மகிழ்ச்சி எனப்படுவது யாதெனில் என்ற தலைப்பில் உரையாற்றினார். 

நிகழ்ச்சியில் மகிழ்வோர் மன்ற இயக்குனர்கள் காளிதாஸ், ஜான் கணேஷ், மகிழ்வோர் மன்ற காப்பாளர் மோகன்ராஜ், நேசனல் பொறியியல்கல்லூரி  பேராசிரியர் சங்கர், தொலை தொடர்பு துறை ராஜேஸ்வரன், தலைமையாசிரியர்கள் வடிவேல், மணிமதி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் லட்சுமண பெருமாள், முத்து முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் மகிழ்வோர் மன்ற காப்பாளர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Nalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer Education


Anbu Communications



Thoothukudi Business Directory