» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தகாத வார்த்தையால் திட்டும் பள்ளி ஆசிரியைகள் : ஆட்சியரிடம் குழந்தைகளின் தாயார் புகார்
திங்கள் 21, ஜனவரி 2019 3:31:41 PM (IST)

பள்ளியின் படிக்கும் தனது இரு மகள்களையும் ஆசிரியைகள் தகாத வார்த்தையில் திட்டுவதாக கூறி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பெண் புகார் அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் தாலூகா, நென்மேனி காலனி தெருவைச் சேர்ந்தவர் சோலைராஜ் மனைவி விஜயா. இவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது நானும் என் கணவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். என் கணவரின் நடத்தை சரியில்லாததால் நான் கடந்த 4 ஆண்டுகளாக கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறேன். கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறேன். எனது குழந்தைகள் இருவரும் அயன்ராஜாபட்டியில் உள்ள இராதாகிருஷ்ணா தொடக்கப் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
அங்குள்ள ஆசிரியைகள் தமிழரசி, ராதா ஆகிய இருவரும் எனது கணவர் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டு எனது மகள்களை தகாத வார்த்தையால் திட்டி வருகிறார்கள். இதுகுறித்து நான் சைல்டு லைனில் நான் புகார் அளித்ததால் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன் பின்னர் ஆசிரியைகள் இருவரும் என்னை மிரட்டி, குழந்தைகளின் டிசியை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்கள். மேலும் எனது கனவரும் என்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி வருகிறார். எனவே, எனது குழந்தைகள் கல்வி தொடரவும் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருக்கு பிரிவு உபசார விழா
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 10:05:28 PM (IST)

புனித மரியன்னை பள்ளியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 7:01:57 PM (IST)

தரம் உயர்த்தப்பட்ட கால்நடை பன்முக மருத்துவமனை: அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 5:11:00 PM (IST)

தூத்துக்குடியில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: எஸ்பி முரளி ரம்பா துவக்கி வைத்தார்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 4:58:47 PM (IST)

தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 3:59:42 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்!!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 3:50:55 PM (IST)
