» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் விவேகானந்தரின் 157வது பிறந்தநாள் விழா : மாணவ மாணவியர் பங்கேற்பு

சனி 12, ஜனவரி 2019 5:23:13 PM (IST)தூத்துக்குடியில் விவேகானந்தரின் 157வது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது

விவேகானந்த கேந்திரம் தூத்துக்குடி கிளையும் காமராஜ் கல்லூரியும் இணைந்து சுவாமி விவேகானந்தரின்  157வது பிறந்தநாளை விவேகானந்த உத்சவ் 2019 என்ற பெயரில் கொண்டாடியது. தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடியில் உள்ள 20க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 280 மாணவ மாணவியர் பங்கு பெற்ற வினாடிவினா போட்டி மற்றும் விவேகானந்தர் வேடம் அணியும் போட்டிகள் நடத்தப்பட்டது.

முன்னதாக காமராஜ் கல்லூரியில் உள்ள விவேகனந்தா சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் நாகராஜன் விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். விவேகானந்தர் வேடம் அணிந்த மாணவ மாணவியர் விவேகானந்தர் பற்றி பாடல்கள் பாடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரியின் டீன் சக்திவேல் வரவேற்று பேசினார். தொடர்ந்து விவேகானந்தர் வேடம் அணிந்த மாணவ மாணவிகள் மேடையில் விவேகானந்தரின் பொன் மொழிகள் மற்றும் அவருடைய பேச்சுகளை பேசினார்கள். 

விழாவில், சாரதா பள்ளி மாணவிகள் நடனம், சச்சிதானந்த சபை உறுப்பினர்கள் பாடல் போன்றவை இடம்பெற்றன. விவேகானந்த கேந்திரதின் உப தலைவர் கௌரி, ஆயுட்கால தொண்டர் பரமகுரு சிறப்புரையாற்றினர். கல்லூரி முதல்வர் நாகராஜன் தலைமையுரை ஆற்றி வினாடிவினா மற்றும் மாறுவேட போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  தூத்துக்குடி விவேகானந்த கேந்திரத்தின்  தலைவர் சுபத்ரா வெற்றிவேல், உறுப்பினர்கள் மதனகோபால், முனியப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.இந்து இளைஞா் முன்னணி

தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து இளைஞா் முன்னணி சாா்பில் விவேகானந்தா் 157 வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜ் கல்லூாியில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இந்து இளைஞர் முன்னணி ராஜேஷ் குமாா்  தலைமையில், மாவட்ட செயலாளா் ராகவேந்திரா மாதவன் முன்னிலையில் இளைஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மாியாதை செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாாிகணேஷ் ,சிவகுமாா் ,செந்தில், பரத்,செல்வவிக்னேஷ், காளிராஜ், வினித் மற்றும் பலா் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

CSC Computer Education

Nalam PasumaiyagamBlack Forest Cakes
Thoothukudi Business Directory