» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புராஜெக்ட் நியூ விங்ஸ் : திறன் மேம்பாட்டு பயிற்சி மாணவிகளுடன் ஆட்சியர் கலந்துரையாடல்

சனி 12, ஜனவரி 2019 3:41:49 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் புராஜெக்ட் நியூ விங்ஸ் திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு அளிக்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறையினை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் போதி ட்ரீ நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவிகளுக்கு நடத்தும் புராஜெக்ட் நியூ விங்ஸ் திட்டத்தின்கீழ் அளிக்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறையினை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதியில் இன்று பார்வையிட்டு மாணவியர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் புராஜெக்ட் நியூ விங்ஸ் திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவிகளுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு, ஆங்கிலம், நேர்முகத்தேர்வு மற்றும் வாழ்க்கைத்திறன் மேம்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த பயிற்சியின் மூலம் மாணவியர்களிடையே உள்ள அச்சத்தை போக்கி அவர்களின் திறமைகள் மேம்படுத்தப்படுகிறது. மேலும், மாணவியர்களின் திறன் மற்றும் தன்னம்பிக்கை வளர்ப்பதோடு, அவர்களின் லட்சியத்தை அடைவதற்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மாணவியர்கள் இந்த பயிற்சி பட்டறையினை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தினந்தோறும் நாளிதழ்கள் படிக்கும் பழக்கத்தினை கடைப்பிடித்து அன்றாட நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ள வேண்டும். எதிர்காலத்தில் லட்சியத்தை அடைய விடாமுயற்சியுடன் தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டு உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என பேசினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர், 99 மாணவியர்கள் தங்கியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவியர் விடுதியில் அடிப்படை வசதிகளை பார்வையிட்டார். அப்போது, மாணவியர்களின் கோரிக்கையான கணிணி, தொலைக்காட்சி மற்றும் பிரிண்டர் ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் புராஜெக்ட் நியூ விங்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அஷ்விதா, பிரவீணா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவியர் விடுதி வார்டன் கலைச்செல்வி மற்றும் மாணவியர்கள் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Nalam Pasumaiyagam

Anbu Communications

Black Forest Cakes


Thoothukudi Business Directory