» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எட்டயபுரம் ஆட்டு சந்தையில் ரூ.7கோடிக்கு விற்பனை: களைகட்டியது பொங்கல் விற்பனை!!

சனி 12, ஜனவரி 2019 11:42:54 AM (IST)



பொங்கல் பண்டியைகையை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டு சந்தையில் சுமார் 7கோடி ரூபாய் வரை விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரத்தில் வாரம் தோறும் சனிக்கிழமை ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். தென் மாவட்டங்களில் நடைபெறும் ஆட்டு சந்தைகளில் மிகவும் புகழ் வாய்ந்த சந்தை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க வியாபாரிகள் வருவது வழக்கம். வழக்கமாக நடைபெறும் ஆட்டுசந்தையில் 2 கோடி ரூபாய் வரையும் திருவிழாக் காலங்களில் 6 கோடி ரூபாய் வரையிலும் ஆடுகள் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் வரும் செவ்வாய்கிழமை பொங்கல் பண்டிகை என்பதால் இன்று ஆட்டு சந்தை களைகட்டியுள்ளது. கடந்த காலங்களை விட ஆடுகளின் வரவு அதிகரித்து காணப்பட்டது. சுமார் 10 ஆயிரம் ஆடுகள் வரை சந்தைக்கு கொண்டு வரப்பட்டன. ரூ 4 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை எடைக்கு ஏற்ப ஆடுகள் விற்பனையாகியது. சுமார் 7கோடி ரூபாய் வரை விற்பனையாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து வியாபாரி சங்கர் என்பவர் கூறுகையில் கடந்த ஆண்டை விட ஆடுகளில் வரத்தும் அதிகம், விலையும் அதிகம் என்றும், ஆனால் ஆடுகளின் வரத்துக்கு ஏற்பனை விற்பனை நடைபெறவில்லை என்றும், மழை இல்லாத காரணத்தினாலும், பனி அதிகளவில் விழுந்து வருவதால் ஆடுகளுக்கு நோய்கள் எதுவும் ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் ஆடு வளர்ப்பவர்கள் ஆடுகளை விற்பனை செய்ய கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். கடந்த ஆண்டு பொங்கல் விற்பனை ரூ 6 கோடி என்றும் இந்தாண்டு 1 கோடி ரூபாய் அதிகரித்து 7 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications



Black Forest Cakes

CSC Computer Education


Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory