» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றியவர் மீது வழக்கு!!

வெள்ளி 11, ஜனவரி 2019 11:34:03 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகே உள்ள தங்கையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் மகள் கலா (32). பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. கலாவின் அண்ணன் அப்பகுதியில் உள்ள தோட்டத்தினை குத்தகைக்கு எடுத்துள்ளார்.  அங்கு ஆழ்வார்திருநகரி அருகே உள்ள மேலகடம்பா கிராமத்தைச் சேர்ந்தவர் சமுத்திரம் மகன் முத்து (45) என்பவர் வேலைபார்த்து வந்துள்ளார். அப்போது தோட்டத்திற்கு அடிக்கடி வந்த கலாவுடன் முத்துவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், இருவரும் நெருங்கிப் பழகியதில் கலா கர்ப்பமானார். 

அவர் 7மாத கர்ப்பினியாக இருந்தபோதுதான் வெளி உலகிற்கு தெரியவந்தாம். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முத்துவிடம் கலாவை திருமணம் செய்துகொள்ளுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். அவரும் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாராம். இந்நிலையில், கடந்த 10.11.2018-ல் கலாவுக்கு ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. இதன் பின்னர் முத்து கலாவை திருமணம் செய்ய மறுத்துவிட்டாரம். இதுகுறித்து கலாவின் அண்ணன் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Nalam Pasumaiyagam


Black Forest Cakes



Anbu Communications



Thoothukudi Business Directory