» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பசுபதி பாண்டியனுக்கு அஞ்சலி செலுத்த கடும் கெடுபிடி : சகோதரி பார்வதி பரபரப்பு குற்றச்சாட்டு

வியாழன் 10, ஜனவரி 2019 7:02:00 PM (IST)




பசுபதி பாண்டியனுக்கு அஞ்சலி செலுத்த போலீசார் கடும் கெடுபிடி செய்வதாக அவரது சகோதரி பார்வதி தூத்துக்குடியில் பேட்டியின் போது கூறினார்.

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியனின் 7ம் ஆண்டு நினைவு தினம் இன்று தூத்துக்குடியில் அனுசரிக்கப்பட்டது. தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி திண்டுக்கல்லில் வைத்து கொலை செய்யப்பட்டார். அவரது உறவினர்கள் மற்றும் கூட்டமைப்பினர் நினைவுநாளை அனுசரித்து வருகின்றனர். இன்று காலை தூத்துக்குடி அலங்காரத்தட்டு கிராமத்திலுள்ள பசுபதி பாண்டியன் மற்றும் அவரது மனைவி ஜெசிந்தா பாண்டியன் நினைவிடத்திலும் சகோதரி பார்வதி நினைவஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பக்கபட்டியில் நடைபெற்ற இரட்டைகொலை வழக்கிற்கும் தேவேந்திரகுலவேளாளர் அமைப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. போலீசார் வேண்டுமென்றே எங்கள் கூட்டமைப்பை வழக்கில் சேர்த்துள்ளனர். தூத்துக்குடியில் பசுபதிபாண்டியன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த போலீசார் பல இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர். மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து அஞ்சலி செலுத்த வருபவர்களையும் தடுத்து விட்டனர். இதே நிலை தொடர்ந்தால் அடுத்த வருடம் பாெதுமக்கள் கொந்தளிப்பார்கள். நாங்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்கவே நினைக்கிறோம். எங்கள் வளர்ச்சி பலருக்கு பிடிக்கவில்லை. பொங்கலுக்கு பிறகு தேவேந்திர குல கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

பசுபதி பாண்டியனின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி நகர பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தூத்துக்குடியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார், வாகனங்கள் அனைத்தையும் ஒழுங்குப்படுத்தி அனுப்பி வைத்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors




crescentopticals

CSC Computer Education




Thoothukudi Business Directory