» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் : எதிர்ப்புக்குழுவினர் முதல்வரிடம் மனு

வியாழன் 10, ஜனவரி 2019 1:26:52 PM (IST)
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குழுவினர் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ., எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் சென்னை முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அளித்தனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பை சார்ந்த பாத்திமாபாபு, தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி, நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் கயாஸ், வழக்கறிஞர் அதிசயகுமார் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தமிழக சட்டபேரவையில் சிறப்பு தீர்மானம் கொண்டுவரவும் அல்லது முதல்வர் அறிவித்த தொழிற்சாலைகள் சிறப்பு சட்டம் நிறைவேற்றி ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி பொதுமக்கள் சார்பில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்கள். 

அப்போது ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ., எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்க செயாலாளர் பாஸ்கர், தெர்மல்ராஜா, ரீகன், தூத்துக்குடி மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை பொருளாளர் தனராஜ் மாவட்ட மகளிரணி செரினாபாக்கியராஜ் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குழுவினர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

தூத்துகுடிகாரன்Jan 11, 2019 - 07:41:46 PM | Posted IP 162.1*****

வெரி குட், கமெண்ட் போடுறத விட்டு விட்டு இவர்களை பாராட்டுங்கள், நன்றி நன்றி நன்றி.

தமிழன்Jan 11, 2019 - 10:51:01 AM | Posted IP 141.1*****

படுகேவலமான மனிதர்கள் இவர்களுக்கு பணம் புகழ் கிடைப்பதற்காக தூத்துக்குடி மக்களின் வாழ்வில் விளையாடுகிறார்கள். போலீஸ் அல்லது சிபிஐ இவர்களை கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் .

உண்மை போராளி!Jan 10, 2019 - 11:44:23 PM | Posted IP 162.1*****

கருங்காலி போராளிகள் கூட்டம்! சுய விளம்பரத்திற்காக சகோதர சகோதரிகளையும் பலி கொடுக்க துணிந்த கயவர் கூட்டம்!!

ராம்Jan 10, 2019 - 11:19:23 PM | Posted IP 141.1*****

நினைச்சா பிளைட்ல பறக்குறாங்க. முதல்வர சந்திக்குறாங்க. ஏது, பணம் . கொஞ்சம் யோசிங்க மக்களே.

மக்கா!Jan 10, 2019 - 05:12:21 PM | Posted IP 172.6*****

பதின்மூன்று பேரை கொன்ற அந்த பதின்மூன்று பேர் கூட்டணி இது தானா?

சிவராம்Jan 10, 2019 - 03:57:59 PM | Posted IP 141.1*****

குமார், கொடுத்ததை பறிக்கக் கூடாது. நான் சின்ன கான்ட்ராக்டர் .எல்லா கம்பெனியிலும் வேலை எடுத்து செய்வேன். விரிவாக்கத்துக்கு நானும் எதிர்ப்பு தான்.

குமார்Jan 10, 2019 - 03:49:55 PM | Posted IP 162.1*****

சிவராம் மற்றும் ராஜா நீங்க STERLITE வருவதற்கு முன்னாடி என்ன செய்ஞ்சிங்க

கணேஷ்Jan 10, 2019 - 03:27:57 PM | Posted IP 162.1*****

சண்முகநாதன் கால்வச்ச இடம் உருப்படாது

உண்மைJan 10, 2019 - 03:02:13 PM | Posted IP 162.1*****

NGO விடம் பணம் வாங்கிக்கொண்டு 13உயிர்களையும் கொன்று விட்டு நல்லது செய்வது போல் நடிக்கும் படுபாவிகள்

கணேசன்Jan 10, 2019 - 02:49:43 PM | Posted IP 162.1*****

ஏன்டா பெட்டியை வாங்கிட்டு 5ம் தேதி செய்திய இன்னைக்கு பார்த்த மாதிரி போடுறீங்க. ஏம்எல்ஏ எவ்வளவு குடுத்தாருடா.

ராஜாJan 10, 2019 - 02:39:11 PM | Posted IP 141.1*****

அண்ணன் செல்லப்பாண்டியன் பலருக்கு வேலை கிடைக்க செய்வார். சண்முகநாதன் பலர் வேலை இழக்க பாடுபடுகிறார். சட்டமன்ற உறுப்பினர் இப்படி போலி போராளிகளை அழைத்து செல்வதன் பின்னணி ஓ பிஎஸ் தான் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வாழ்க பணநாயகம். ஜெய் ஹிந்த். சிவராம் சொல்வது போல நானும் வேற சாதிக்காரன் தான்.

சிவராம்Jan 10, 2019 - 02:21:32 PM | Posted IP 162.1*****

நாடார் கடை வெச்சி பொளைக்கீங்க. பர்னாந்து மீன் பிடிச்சு பொளைக்கீங்க. நாங்க மத்த ஜாதி காரன் எப்படி ெ பாளைப்பேம் . இந்த படத்தில் உள்ளவர்கள் தான் கலவரத்துக்கு காரணம். சிபிஐ விசாரனையில் 2ண்மை வெளிவரும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

CSC Computer Education

Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory