» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரஜினியின் பேட்ட படத்தை தடுத்து நிறுத்திய போலீசார் : திரையரங்கிலிருந்து ரசிகர்களை வெளியேற்றினர்

வியாழன் 10, ஜனவரி 2019 10:44:59 AM (IST)கோவில்பட்டியில் அனுமதியின்றி "பேட்ட" படத்தின் சிறப்பு காட்சி ஒளிபரப்பியதால் போலீசார் படத்தை நிறுத்தி, திரையரங்கிலிருந்து ரசிகர்களை வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று நடிகர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் நடிகர் அஜித் நடித்த விசுவாசம் திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. இரு திரைப்படங்களுக்கும் சிறப்பு காட்சிகள் அனுமதி கிடையாது என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. பொங்கல் திரைப்படங்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு யாரும் வரவில்லை என்றும், அனுமதி கேட்டு வந்தால் வழங்க பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜீ நேற்று ஏற்கனவே தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் கோவில்பட்டியில்  பேட்ட மற்றும் விசுவாசம் திரைப்படங்கள் சிறப்புக் காட்சிக்கு கோவில்பட்டி உள்ள தியேட்டர்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று இரவே காவல்துறையினர் இரு திரைப்படங்கள் வெளியாகும் திரையரங்கு சென்று சிறப்பு காட்சி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று அறிவுறுத்தி இருந்தனர், இந்நிலையில் கோவில்பட்டி சண்முகா திரையரங்கில் மட்டும் காலையில் பேட்ட திரைப்படத்தின் சிறப்பு காட்சி  ஒளிபரப்பு செய்யப்பட்டது. 

இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெபராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சிறப்பு காட்சியை தடுத்து நிறுத்தினர். மேலும் திரையரங்கிலிருந்து ரசிகர்களை வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடையாது என்றும் வழக்கமான நேரங்களில் மட்டும்தான் திரைப்படத்தை ஒளிபரப்பு செய்யவேண்டும் என்று திரையரங்கு உரிமையாளரிடம் போலீசார் அறிவுறுத்தி சென்றனர். இதனால் திரையரங்கம் பரபரப்பாக காணப்பட்டது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape TailorsJoseph Marketing

Black Forest Cakes


Anbu Communications

Nalam Pasumaiyagam


CSC Computer EducationThoothukudi Business Directory