» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி - உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்குத் தடை

செவ்வாய் 8, ஜனவரி 2019 11:25:16 AM (IST)

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று கூறிய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என மக்கள் போராட்டம் நடந்தபோது கலவரம் ஏற்பட்டு, 13 அப்பாவி பொதுமக்கள் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இதனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. அதன்படி ஆலையும் மூடப்பட்டது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கை விசாரித்து வந்த தேசிய பசுமை தீர்ப்பாயம், 3 வார காலத்திற்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறந்துகொள்ளலாம் எனவும், தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ள முழு முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் ஸ்டெர்லைட் ஆலை நிறைவேற்றி பின்னர் ஆலையை திறக்கலாம் என தீர்ப்பளித்துள்ளது. மேலும், ஆலைக்கு தடை போட்ட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுக்குத் தடை விதித்தும், உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிததுள்ளது. 


மக்கள் கருத்து

PandiJan 8, 2019 - 09:53:17 PM | Posted IP 172.6*****

Ban sterlite

ராமநாதபூபதிJan 8, 2019 - 04:35:45 PM | Posted IP 162.1*****

தேசிய பசுமை தீர்ப்பாயம் இவ்வளவு அதிகாரம் கொண்ட அமைப்பாக இருந்தால் பதினெட்டு சட்ட மன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம், பாபர் மசூதி வழக்கு, ரபேல் ஊழல் என பல்வேறு வழக்குகளை கொடுத்து விசாரிக்க சொல்லலாமே. இறந்த 13 பேருக்கு இன்னும் நீதி கிடைக்க வில்லை அதற்குள் தொழிற்சாலைகாரனுக்கு தீர்ப்பு வந்து விட்டது. என்ன சட்டமோ என்ன நீதியோ

மூனுசென்ட் ராஜேந்திரன்Jan 8, 2019 - 03:30:37 PM | Posted IP 141.1*****

போலி போராளிகளை நம்பி மக்கள் இன்னும் ஏமாற வேண்டாம் இந்தியாவில் ஸ்டெர்லைட் ஆலையை சேர்த்து 9 ஆலைகள் இருக்கும் போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மட்டும் ஏன் போராட்டம் சிந்தியுங்கள் மக்களே. மக்கள் அதிகாரம் போன்ற நக்சல் அமைப்புகள் தான் 13 பேர் மரணத்துக்கு காரணம்.

SivaJan 8, 2019 - 01:25:35 PM | Posted IP 162.1*****

Ban ஸ்டெர்லைட்

ஒருவன்Jan 8, 2019 - 12:42:14 PM | Posted IP 162.1*****

சரி .. ஸ்டெர்லைட் ஓனர் (வடை நாட்டு இந்தி காரன்) வீடு குஜராத் பக்கத்துல கொண்டு போய் வைக்க சொல்லலாம்ல ... வடை நாட்டு நீதிபதியை எங்கேயோ தூரத்துல இருக்கான் ஸ்டெர்லைட் பக்கத்துல வராதவன் திறக்க சொல்றான்... வடை நாட்டுக்காரரிடம் தமிழக அரசு மண்டியிட்டு இருக்கிறது.

மகாராஜாJan 8, 2019 - 12:34:10 PM | Posted IP 162.1*****

BAN STERLITE . . SAVE TUTICORIN . . .!!!!

R RAVIJan 8, 2019 - 12:04:33 PM | Posted IP 141.1*****

எல்லாமே பணம் தான்

KumarJan 8, 2019 - 11:36:06 AM | Posted IP 141.1*****

Ban sterlite

AlexJan 8, 2019 - 11:34:52 AM | Posted IP 141.1*****

Judge money

AnanthJan 8, 2019 - 11:34:01 AM | Posted IP 141.1*****

No justice

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Black Forest Cakes

CSC Computer Education


Nalam PasumaiyagamThoothukudi Business Directory