» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாள்தோறும் 300 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: ஆட்சியர் தகவல்

சனி 5, ஜனவரி 2019 3:48:58 PM (IST)நாள்தோறும் 300 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ.1,000/- வழங்கும் வகையில் பகுதிவாரியாக பிரித்து ஏற்பாடு செய்திட வேண்டும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ மற்றும் கரும்பு, முந்திரி, உலர்திராட்சை, ஏலக்காய் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கமாகவும் வழங்க உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் 963 நியாயவிலைக கடைகளில் உள்ள 4 லட்சத்து 84 ஆயிரத்து 550 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. 

நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் பாயிண்ட் ஆப் சேல் இயந்திரத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட விவரத்தினை பதிவு செய்ய வேண்டும். 96 நியாய விலைக் கடைகளில் 1000க்கு மேல் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இந்த கடைகளில் சிறப்பு கவனம் செலுத்தி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும். குடும்ப அட்டையை தவறியவர்கள் தங்களது நியாய விலைக் கடையில் பதிவு செய்து கைபேசி எண்ணில் பெறப்படும் ஓ.டி.பி. எண் மற்றும் ஆதார் எண்ணை நியாய விலைக்கடை விற்பனையாளர்களிடம் தெரிவித்து பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம். 

குடும்ப அட்டையில் உள்ள யாராவது ஒரு நபர் மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பை நேரில் வந்து பெற்றுக்கொள்ள வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு எந்தெந்த பகுதிகளுக்கு எந்த நாளில் வழங்கப்படும் என்ற விவரத்தினை அனைத்து நியாய விலைக்கடைகளிலும் 07.01.2019 அன்று ஒட்டப்பட வேண்டும். இதனை கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட விவரத்தினை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். 

நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு கூடுதல் பணியாளர்களை அமர்த்திட வேண்டும. பகுதிநேர செயல்படும் நியாய விலைக்கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து விவரத்தினை பொதுமக்களிடையே முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். நாள்தோறும் 300 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ.1,000/- வழங்கும் வகையில் பகுதிவாரியாக பிரித்து ஏற்பாடு செய்திட வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கம் ரூ.1,000/- வழங்கப்படுவதையொட்டி நியாய விலைக்கடைகளில் காவல் துறையின் மூலம் தேவையான பாதுகாப்புகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு சென்றடையும் வகையில் அலுவலர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர்.மு.வீரப்பன், சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, இணை பதிவாளர் (கூட்டுறவுத் துறை) அருளரசு, கோட்டாட்சியர்கள் விஜயா (கோவில்பட்டி), கோவிந்தராசு (திருச்செந்தூர்), மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ) சங்கரநாராயணன், வட்டாட்சியர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam PasumaiyagamBlack Forest Cakes

CSC Computer Education


Anbu CommunicationsThoothukudi Business Directory