» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஜன.8ல் ஆர்ப்பாட்டம், 9-ல் மறியல்: அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவி்ப்பு

புதன் 2, ஜனவரி 2019 5:43:35 PM (IST)மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 8ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டமும், 9ம் தேதி மறியல் போராட்டமும் நடைபெறுகிறது. 

இதுகுறித்து ஐஎன்டியுசி மாநில செயல் தலைவர் பி கதிர்வேல், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ரசல், மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : மத்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி, ஹெச்எம்எஸ், எல்பிஎப், ஏஐசிசிடியு உள்ளிட்ட 11 மத்திய தொழிற்சங்கங்கள் ஜனவரி 8-9 தேதிகளில் இரண்டுநாள் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. 

வேலைநிறுத்தத்தை தூத்தக்குடி மாவட்டத்தில் வெற்றிகரமாக்குவது தொடர்பான பணிகளில் தூத்துக்குடி மாவட்ட தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் துறைமுகம், மின்வாரியம், போக்குவரத்து கழகம், தூத்துக்குடி அனல்மின் நிலையம், குடிநீர் வடிகால்வாரியம், பாரத் பெட்ரோலியம், தாரங்கதாரா கெமிகல், எட்டையாபுரம் பாரதிமில் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைநிறுத்தம் செய்வதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உப்பளம், தீப்பெட்டி, கட்டுமானம், ஆட்டோ, லாரி, வேன், டாக்சி, சுமைப்பணி உள்ளிட்ட முறைசாரா அரங்கங்களில் வேலைநிறுத்தம் செய்வதற்கான அறிவிப்புகள் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

வேலைநிறுத்தம் துவங்கும் ஜனவரி 8 அன்று காலை 11 மணிக்கு தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டமும், ஜன 9 அன்று அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கோவில்பட்டி, தூத்துக்குடி, திருச்செந்தூர், ஆகிய நகரங்களில் தொழிலாளர்களுடன் விவசாயிகள், விவசாய தொழிலாளர்களும், வேலையில்லாத இளைஞர்களும், பெண்களும் பங்கேற்கும் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்வதுடன் ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற இயக்கங்களிலும் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும், நாட்டின் நலன் கருதி நடத்தப்படும் 2நாள் வேலைநிறுத்தத்துக்கு பொதுமக்கள் பேராதரவு தரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். 

மத்திய அரசின் சாலை போக்குவரத்து சட்டம், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற பொருளாதார நடவடிக்கைகளால் போக்குவரத்து நிறுவனங்கள், உப்பளங்கள், சிறு நடுத்தர தீப்பெட்டி தொழிலுடன், கட்டுமானத் தொழிலும் வணிகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொண்டு அனைவரும் பேராதரவு தந்து வேலைநிறுத்தத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் வெற்றிபெறச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். பேட்டியின் போது, ஏஐடியுசி மாநிலச் செயலாளர் ஜி.மணியாச்சாரி, எல்பிஎப் மாவட்டச் செயலாளர் சுசி.ரவீந்திரன், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் டி.சிவராமன், ஹெச்எம்எஸ் சங்கம் சார்பில் துறைமுக சத்யா, ஐஎன்டியூசி ராஜகோபாலன், ஏஐடியூசி பாலசிங்கம், எல்பிஎப் ராமசாமி, ஏஐசிசிடியு சகாயம் உட்பட பலர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து

சாமிJan 2, 2019 - 08:40:04 PM | Posted IP 141.1*****

பாவம் -- ரொம்ப கஷ்டம் போல

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

CSC Computer Education

Anbu Communications
Nalam PasumaiyagamThoothukudi Business Directory