» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடைகளில் 1டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்: அதிகாரிகளைக் கண்டித்து கடையடைப்பு

புதன் 2, ஜனவரி 2019 5:27:34 PM (IST)கோவில்பட்டியில் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு 1டன் பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர். இதனைக் கண்டித்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் ஜனவரி 1ம் தேதி முதல் பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்கள் உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ் டிக் உறிஞ்சி குழல், பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் கொடி உள்பட 14 பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் 110விதியின் கீழ் அறிவித்தார். 

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் இது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம், இயக்கங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடை தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது. அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை தவிர்க்கவும், கடைகள், உணவகங்கள், விற்பனையாளர், காய்கறிச்சந்தை உள்ளிட்ட பிற இடங்களில் பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்ய வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை ஆகிய துறைகளில் இருந்து மூவர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசு அதிகரிகள் ஆய்வு செய்து தடைசெய்யப்பட்ட 14வகையான பிளாஸ்டிக் பொருள்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். கோவில்பட்டியிலும் கடந்த 6 மாதங்களாக நகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. இன்று நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜ் தலைமையிலான குழுவினர் நகரின் அனைத்து  வணிகநிறுவனங்கள், மருத்துவமனைகள் என ஆய்வு நடத்தி சுமார் 1டன் பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர். 

மேலும் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருள்கள் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படுவது மட்டுமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஆய்வின் போது.பஸ் நிலையம் முன்பு நகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்திய போது, ஆய்வு நடத்துவதற்கு அந்த பேக்கிரி உரிமையாளர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆய்வில் நகராட்சி மேலாளர் முத்துச்செல்வம், சுகாதார ஆய்வாளர் சுரேஷ், திருப்பதி, வள்ளிராஜ், கஜா, சுரேஷ்குமார், தூய்மை இந்தியா திட்டம் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

வணிகர்கள் கடையடைப்பு இதற்கிடையில் நகராட்சி அதிகாரிகளின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் தடை செய்யபடாத பிளாஸ்டிக் பொருள்களையும் பறிமுதல் செய்துள்ளதாகவும்,;இது சிறு வணிகர்களை மத்திய, மாநில அரசுகள் நசுக்கும் ஒரு செயல் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். வணிகர்களுக்கு ஆதரவாக கோவில்பட்டியில் செயல்படும் 110 கடலை மிட்டாய் கம்பெனிகளும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  நகராட்சி அதிகரிகள் அதிரடி ஆய்வு, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகள் என்று நகரமே பரபரப்பாக காணப்படுகிறது.


மக்கள் கருத்து

மக்கள்Jan 4, 2019 - 12:35:38 PM | Posted IP 141.1*****

ஏழைகளின் கடைகளை மட்டும் குறி..

தமிழன்Jan 2, 2019 - 06:21:31 PM | Posted IP 141.1*****

மொத்தத்தில் அதிகாரிகள் லஞ்சம் அதிகமாக வாங்குவதற்கு மேலும் ஒரு அறிய வாய்ப்பு .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesAnbu Communications


CSC Computer Education


Nalam PasumaiyagamThoothukudi Business Directory