» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 20 தலைமை காவலர்களுக்கு பதவி உயர்வு: எஸ்பி முரளி ரம்பா உத்தரவு

வெள்ளி 9, நவம்பர் 2018 12:33:09 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றிவரும் 20 தலைமை காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு அளித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 25.10.1993 அன்று இரண்டாம் நிலை காவலர்களாக பணியில் சேர்ந்து காவல்துறையில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி, தற்போது தலைமை காவலர்களாக பணியாற்றி வரும் மாவட்ட தனிப்பிரிவு மயிலேறும் முருகன், திருச்செந்தூர் பாபுராஜ், வடபாகம் சிவன், ஆத்தூர் ரமேஷ், தருவைக்குளம் சங்கரலிங்கம், 

கயத்தாறு ரவிச்சந்திரன், கழுகுமலை குமார், சிப்காட் திருப்பாற்கடல்நாதன், சூரங்குடி பொன்ராஜ், திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் பாஸ்கரன், வடபாகம் சிவசங்கர், கோவில்பட்டி மேற்கு பிச்சை, தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு மாரிச்செழியன், தென்பாகம் சேகர், விளாத்திக்குளம் வீரதேவஜெட்டி, தெர்மல் நகர் முருகன், கோவில்பட்டி மேற்கு நாராயணசாமி, கோவில்பட்டி மதுவிலக்கு ராஜ்குமார், க்யூ பிரிவு கீதன் மற்றும் தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழுமம் முருகன் ஆகியோர்களை சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக நியமனம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா உத்தரவு பிறப்பித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு : கணவர் தற்கொலை

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 12:38:21 PM (IST)

தூத்துக்குடியில் லாரி கடத்தல் : இளைஞர் கைது

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 12:32:23 PM (IST)

Sponsored Ads

Anbu Communications




Black Forest Cakes

CSC Computer Education


Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory