» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பணமதிப்பிழப்பு: தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வெள்ளி 9, நவம்பர் 2018 12:18:56 PM (IST)



பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கிய மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி திடீரென்று அறிவித்தார். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதையொட்டி தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே காங்கிரஸ் கட்சியின் சார்பில் பணம் மதிப்பிழப்பு தினத்தை கருப்பு தினமாக, கடைபிடித்து மாநகர் மாவட்ட தலைவர் சிஎஸ் முரளிதரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம், முன்னாள் எம்எல்ஏ டேனியல் ராஜ், வர்த்தகப் பிரிவு செயலாளர் டேவிட் பிரபாகரன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பெருமாள் சாமி, நிர்வாகிகள் பாரகன் அந்தோணிமுத்து, எஸ்டிசி கனியம்மாள், கோபால், ஜவஹர், சந்திரபோஸ், ஏடிஎஸ் அருள், கந்தசாமி, உட்பட  பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Nalam Pasumaiyagam

New Shape Tailors


Joseph Marketing

Black Forest Cakes


CSC Computer Education




Thoothukudi Business Directory