» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் 12 கால் மண்டபத்தின் மேற்கூரை இடிந்தது: உரிய நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை

வெள்ளி 9, நவம்பர் 2018 8:31:27 AM (IST)

திருச்செந்தூரில் பழைமை வாய்ந்த 12 கால் மண்டபத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது . இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் வசதிக்காக சன்னதித் தெருவில் இருபக்க தூண்கள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையால் நிழல்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தெருவில் உள்ள அகஸ்தியர் கோயில் அருகில் பழைமையான செங்குந்தர் 12 கால் மண்டபம் உள்ளது. 

இந்த மண்டபம் பலமிழந்து காணப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களாக அப்பகுதியில் பெய்த மழையால் மண்டபத்தின் மேற்கூரை ஈரப்பதம் தாங்காமல் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் பக்தர்கள் யாரும் அவ்வழியாக வராததால் விபரீதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் யாரும் செல்லாதவாறு கயிறு கட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதால், மண்டபம் மேலும் இடிந்து விழுவதற்குள் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing


Friends Track CALL TAXI & CAB (P) LTD




crescentopticals

New Shape Tailors



Thoothukudi Business Directory