» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

வெள்ளி 9, நவம்பர் 2018 8:19:06 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. கயத்தாறு சாய்படைதாங்கி குளம் இந்த ஆண்டு 2-வது முறையாக நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
 
வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த சில நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. தூத்துக்குடி காலை 11 மணி முதல் மிதமான மழை பெய்தது. மதியத்துக்கு மேல் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் தூத்துக்குடியில் சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கின. இதில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. மழை காரணமாக மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

சாயர்புரம் அருகே உள்ள குலையன்கரிசல் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள பெட்டை குளத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. விரைவில் குளம் நிரம்பும் சூழல் உருவாகி உள்ளது. ஆகையால் குலையன்கரிசல், அத்திமரப்பட்டி, கோரம்பள்ளம், வீரநாயக்கன்தட்டு மற்றும் சுற்றுவட்டார மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கயத்தாறு, தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, ஏரல், சாத்தான்குளம், தட்டார்மடம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. திருச்செந்தூர், ஆறுமுகநேரி, உடன்குடி, குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் மிதமான மழை பெய்தது. 

பலத்த மழையின் காரணமாக கயத்தாறு அருகே தலையால்நடந்தான்குளம் கிராமத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன் என்பவரது ஓட்டு வீட்டின் மேற்கூரை முழுவதும் பெயர்ந்து விழுந்தது. இதேபோன்று அப்பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவரது ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அந்த வீடுகளில் யாரும் இல்லாததால், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மழையால் சேதம் அடைந்த வீடுகளை வருவாய் துறையினர் பார்வையிட்டனர். மழையின் காரணமாக, கயத்தாறு சாய்படைதாங்கி குளம் இந்த ஆண்டு 2-வது முறையாக நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

கயத்தாறில் இருந்து தலையால்நடந்தான்குளம் செல்லும் ஓடையை வழிமறித்து, காற்றாலை நிறுவனங்கள் பாதை அமைத்ததால், ஓடையில் தண்ணீர் செல்லாமல், அருகில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக சாத்தான்குளம் பகுதியில் 68.4 மி.மீ. மழை பெய்துள்ளது. பிற இடங்களில் பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): ஸ்ரீவைகுண்டம் - 65.5, காயல்பட்டினம்- 22, கயத்தாறு- 20, குலசேகரன்பட்டினம்-17, ஓட்டப்பிடாரம்-16, விளாத்திகுளம்-12. மாவட்டம் முழுவதும் புதன்கிழமை மாலை 4 மணி முதல் நேற்று மாலை 4 மணி வரை 236.10 மி.மீ. மழை பெய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு : கணவர் தற்கொலை

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 12:38:21 PM (IST)

தூத்துக்குடியில் லாரி கடத்தல் : இளைஞர் கைது

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 12:32:23 PM (IST)

Sponsored Ads



Black Forest Cakes

CSC Computer Education

Nalam Pasumaiyagam



Anbu Communications



Thoothukudi Business Directory