» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் சஷ்டி விழா: கோயிலில் கட்டணம் உயர்வு

வியாழன் 8, நவம்பர் 2018 4:58:59 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக இன்று துவங்கியது. சஷ்டி விழாவை முன்னிட்டு விஸ்வரூப தரிசன கட்டணமாக ரூ.2 ஆயரம், அபிஷேக கட்டணம் ரூ.3 ஆயிரம், அபிஷேக வி.வி.ஐ.பி. கட்டணமாக ரூ.7 ஆயிரத்து 500ம் கட்டணம் உயர்த்தப்பட்டது.

*சஷ்டி விழாவை முன்னிட்டு விஸ்வரூப தரிசன கட்டணமாக ரூ.2 ஆயரம், அபிஷேக கட்டணம் ரூ.3 ஆயிரம், அபிஷேக வி.வி.ஐ.பி. கட்டணமாக ரூ.7 ஆயிரத்து 500ம் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதே போல் யாகசாலையில் நுழைவு கட்டணமாக ரூ.3 ஆயிரம் பக்தர்களிடம் பெறப்பட்டது. கடந்த ஆண்டு விஸ்வரூ தரிசனம் கட்டணமாக ரூ.100ம் ஆபிஷேக கட்டணம் ரூ.200ம், வி.வி.ஐ.பி. அபிஷேக கட்டணமாக ரூ.800ம் வசூலிக்கப்பட்டது. இதனை தவிர சிறப்பு விரைவு தரிசனம் கட்டணமாக ரூ.250, விரைவு தரிசன கட்டணம் ரூ.100ம் பக்தர்களிடம் வசூலிக்கப்பட்டது.

* கோயில் வளாகத்தில் பக்தர்கள் தங்கி விரதமிருக்க 9 இடங்களில் தகர கொட்டகை அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கொட்டகையிலும் 500 பக்தர்கள் வீதம் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

* கோயில் கிரி பிரகாரத்தில் மண்டபம் இடிந்து ஓராண்டு நிறைவு பெற உள்ளது. இதனால் வெறிச்சோடி காணப்பட்ட பிரகாரத்தில் தற்போது இரும்பு கம்பிகளால் கட்டப்பட்டு  தகரத்தால் ஆன தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

* திருச்செந்தூரில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்றுஅதிகாலையிலேயே மழை தூறிக்கொண்டு இருந்தது. காலை 10.30 மணிக்கு மேல் மழை கொட்டியது. சுமார் அரைமணிநேரம் மழை பெய்தது. மழை கொடடியதால் பல்வேறு சிரமங்களுக்கு இடையே விரதம் இருந்தனர்.

* கோயில் வளாகத்தில் பக்தர்கள் யாகசாலை பூஜை பார்ப்பதற்கு வசதியாக 20 இடங்களில் எல்.இ.டி. டி.வி. வைக்கப்பட்டு நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. கோயில் கடற்கரை அருகே 10க்கு 8 என்ற அளவில் அகன்ற எல்.இ.டி. ஸ்கீரின் மூலம் ஒளிப்பரப்பு செய்யப்பட்டன.

* வழக்கமாக கந்த சஷ்டி நிகழ்ச்சிகளை உள்ளூர் டி.வி.சேனல்கள் மூலம் ஒளிப்பரப்பபடுவது உண்டு. இதன்மூலம் வீட்டில் இருந்தபடியே யாகசாலை பூஜைகள், பக்தி சொற்பொழிவுகள் ஆகிவற்றை பக்தர்கள் கண்டு களிப்பார்கள். இந்த முறை லோக்கல் சேனல் ஒளிப்பரப்பு செய்ய நாள் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் சஷ்டி நிகழ்ச்சிகளை லோக்கல் சேனல்கள் ஒளிப்பரப்ப மறுத்துவிட்டன. இதனால் பெரும்பாலான பக்தர்கள் சஷ்டி நிகழ்ச்சிகளை காண வாய்ப்பு இல்லாமல் போனது பக்தர்களிடையே மனவேதனையை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து

தமிழன்Nov 9, 2018 - 11:14:05 AM | Posted IP 172.6*****

லோக்கல் சேனல்களில் சஷ்டி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கோவில் நிர்வாகம் அனுமதிக்கவேண்டும்....தொட்டதுக்கெல்லாம் காசு பார்க்கும் மனப்பான்மையை அறநிலையத்துறை மாற்றவேண்டும்....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing

CSC Computer Education

New Shape Tailorscrescentopticals
Thoothukudi Business Directory