» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சர்க்கார் படம் பார்க்கவந்த வாலிபர் பைக் விபத்தில் பலி : நண்பர் படுகாயம் - தூத்துக்குடியில் பரிதாபம்

புதன் 7, நவம்பர் 2018 11:50:48 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் "சர்க்கார்" படம் பார்க்க வந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். 

தூத்துக்குடி அருகே உள்ள வேப்பலோடையை சேர்ந்தவர் ராமர்பாண்டி மகன் ராஜா (35). குளத்தூரை சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜா (27). இவர்கள் இருவரும் வேப்பலோடை பகுதியில் உள்ள உப்பளத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். நேற்று தீபாவளி விடுமுறை என்பதால் இருவரும் மதியம் விஜய் நடித்து நேற்று வெளியான ‘சர்கார்’ படம் பார்க்க தூத்துக்குடிக்கு வந்தனர். படம் பார்த்து விட்டு இருவரும் ஒரே மோட்டார் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

இரவு 8 மணியளவில் தருவைகுளம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் வந்தபோது அவ்வழியாக சென்ற ஒரு லாரி அவர்களது பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த ராமர்பாண்டி மகன் ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த செ.ராஜா காயத்துடன் உயிர் தப்பினார். அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தருவைகுளம் போலீசார் வழக்குபதிந்து விபத்துக்கு காரணமான லாரியை தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு : கணவர் தற்கொலை

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 12:38:21 PM (IST)

தூத்துக்குடியில் லாரி கடத்தல் : இளைஞர் கைது

ஞாயிறு 22, செப்டம்பர் 2019 12:32:23 PM (IST)

Sponsored Ads

Black Forest Cakes

CSC Computer Education

Nalam Pasumaiyagam





Anbu Communications



Thoothukudi Business Directory