» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாசில்லா தீபாவளி : ஆட்சியர் அறிவுறுத்தல்

வெள்ளி 2, நவம்பர் 2018 9:13:32 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாட பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆட்சியர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: 
உச்சநீதிமன்ற நீதிமன்ற தீர்ப்பின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில்லா, மாசில்லா தீபாவளி கொண்டாடுவது தொடர்பாக பின்வரும் நெறிமுறைகளைக் கையாள வேண்டும்.

தமிழக அரசால் அறிவிக்கப்படும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், புனிததளங்கள் முதலானவை அமைந்துள்ள அமைதி பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்க கூடாது. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது. பட்டாசுகளை கவனமாகவும் விபத்தில்லாமலும் வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் தண்ணீர், மணல், ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். 

பெரியவர்கள் உடனிருக்க பட்டாசுகளை வெடிக்க வேண்டும். குடிசைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இருக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. ஒலியினைக் குறைத்து செவியினை காக்க வேண்டும். திறந்தவெளி மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும். உச்சநீதிமன்ற நீதிமன்ற தீர்ப்பின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில்லா, மாசில்லா தீபாவளி கொண்டாடிட பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

தமிழன்Nov 2, 2018 - 08:27:09 PM | Posted IP 162.1*****

பொதுமக்களை மிரட்டும் வகையில் இன்று வீடு வீடாக வந்து சிலர் வீடுகளின் முகவரியை கேட்டு சென்றுள்ளனர், மேலும் வெடி வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி சென்றுள்ளுநர் .....இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.... மாவட்ட நிர்வாகம் பொதுமக்களையும் சிறுவர்களையும் மிரட்டி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்,.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


CSC Computer Education


Anbu Communications



New Shape Tailors

Joseph Marketing

Black Forest Cakes



Thoothukudi Business Directory