» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்சியர் அலுவலகத்தில் சசிகலாபுஷ்பா வாக்குவாதம் : கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வியாழன் 1, நவம்பர் 2018 1:33:39 PM (IST)




தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சசிகலாபுஷ்பா எம்பி டிஆர்ஓ வுடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று  மத்திய அரசு திட்டங்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்த கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்க வந்த சசிகலா புஷ்பா எம்பி.  இதை கண்டித்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தார். அவருடன் அமமுக மாவட்ட செயலாளர் ஹென்றி உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டம் குறித்து அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட வருவாய்அலுவலர் வீரப்பன் அங்கு வந்ததும் ஆவேசமான சசிகலாபுஷ்பா, மத்தியஅரசின் கூட்டம் என்று அழைக்கீறிர்கள். இங்கு வந்து பார்த்தால் எம்பி, எம்எல்ஏ, மாவட்டஆட்சியர் என யாரையும் காணவில்லை. இதற்காக டெல்லியிலிருந்து வந்த எனது நேரத்தை வீணடித்து விட்டீர்கள்.  இந்த திட்டம் மத்தியஅரசு திட்டம். இந்த கூட்டத்தை திடீரென ரத்து செய்வது மத்தியஅரசையும், பிரதமரையும் அவமதிப்பதாகும். இதற்கு தூத்துக்குடி ஆட்சியர் பதிலளித்தே தீர வேண்டும். மேல்சபையில் நான் இது குறித்து கண்டிப்பாக பேசுவேன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

இதனிடையே சசிகலாபுஷ்பா எம்பி பேச்சு குறித்து அறிந்த மாவட்டஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்களை  , எம்.பி., அவமதித்து பேசியதாக கூறி வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்களால் ஆட்சியர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. பிரச்சனை காரணமாக அங்கு எராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Nov 1, 2018 - 05:11:31 PM | Posted IP 141.1*****

புஸ்பா புருஷன் வரலியா?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors



Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing

crescentopticals




Thoothukudi Business Directory